காதலர் தினத்தன்று திருமணத்தை உறுதி செய்த ஆர்யா - சாயிஷா

By ஸ்கிரீனன்

காதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷாவுடனான காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளார் ஆர்யா

2018-ம் ஆண்டு சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா இணைந்து நடித்த படம் 'கஜினிகாந்த்'. இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. மார்ச் மாதத்தில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆர்யா - சாயிஷா இருவருமே இச்செய்தி குறித்து எவ்வித தகவலையுமே உறுதிப்படுத்தவில்லை. இருவருமே அமைதி காத்து வந்ததால், காதலிப்பது உண்மை தான் என தெரியவந்தது.

இன்று (பிப்14) காதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷா உடனான காதலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ஆர்யா. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா கூறியிருப்பதாவது:

எங்களது குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன், எங்களுடைய வாழ்க்கையின் சந்தோஷமான நாட்களை உங்களிடையே பகிர்ந்து கொள்கிறேன். எங்களது திருமணம் மார்ச்சில் நடைபெறவுள்ளது. நாங்கள் இருவரும் இணையும் இந்த புதிய பயணத்துக்கு உங்களுடைய அன்பு, ஆசிர்வாதமும் தேவை.

இவ்வாறு ஆர்யா தெரிவித்துள்ளார்.

ஆர்யாவின் அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஆர்யா, சாயிஷா ஆகிய இருவரும் தற்போது சூர்யா நடித்து வரும் 'காப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்