புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அபிநந்தன் பிடிபட்டு இருப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு மாதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இரு இந்திய விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. மேலும், அபிநந்தன் தொடர்பாகவும், போர் மேகம் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஊடகங்களுக்கு மாதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் மாதவன் கூறியிருப்பதாவது:
''இந்தப் போர் தீவிரவாதத்துக்கு எதிரானது. இரண்டு தேசங்களுக்கு இடையேயானது அல்ல. அன்பார்ந்த ஊடகங்களே, தயவுசெய்து இதைப் பெரிதாக்குவதை நிறுத்துங்கள். நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து, அமைதியை நோக்கிச் செல்ல முயற்சிப்போம்''.
இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago