இன்று அமலுக்கு வந்த புதிய நடைமுறை; பார்க்கும் டிவி சேனல்களுக்கு மட்டுமே கட்டணம்: ‘ஜீ தமிழ்’ வர்த்தகப் பிரிவு தலைவர் சிஜூ பிரபாகரன் நேர்காணல்

By மகராசன் மோகன்

‘‘நாமதான் மாசா மாசம் கேபிள்காரர் கிட்ட சந்தா கட்டுறோமே? அப் புறம் எதுக்கு ‘எக்ஸ்ட்ரா பணம் கட்டுங்க.. கட்டுங்க’ன்னு டிவியில விளம்பரம் பண்ணிட்டே இருக்காங்க?’’

கடந்த சில வாரங்களாக டிவி நேயர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் சந்தேகம் இது. தொலைக்காட்சிகளிலும் ‘இது எங்க சேனல் பிரைம் பேக், வேல்யூ பேக்’ என்பதுபோன்ற விளம்பரங்கள் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன. டிவி பார்ப்பவர்களுக்கு இந்த சந்தேகம் தீர்ந்ததோ இல்லையோ.. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (‘டிராய்’) கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை இன்று (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வந்துவிட்டது. நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட முன்னணி சேனல்கள் தங்களது விலைப் பட்டியலை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன. இதுதொடர்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவர் (பிசினஸ் ஹெட்) சிஜூ பிரபாகரனுடன் ஒரு நேர்காணல்..

‘சேனல் பே பேக்’ எனும் தொலைக் காட்சிகளுக்கான விலைப் பட்டியல் ஒருவழி யாக அமலுக்கு வந்துவிட்டதே.

ஏரியா கேபிள் ஆபரேட்டர்கள் வழியா கவோ, டிடீஎச் வழியாகவோ ஒவ்வொரு மாதமும் நம் வீட்டுக்கு வருவது 200 முதல் 300 சேனல்கள் இருக்கும். ஆனால், பொதுவாகப் பார்த்தால் ஒவ்வொரு குடும் பத்தினரும் சராசரியாக ஒரு மாதத்தில் அதிகபட்சம் 30 முதல் 40 சேனல்கள் வரைதான் பார்ப்பார்கள். அப்படியிருக்க, பொதுமக்கள் ஏன் தேவை இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு பணம் தரவேண்டும்? எனவே, பார்க்காத சேனல்களுக்கு பொதுமக்களிடம் பணம் பெறக்கூடாது; பார்க்கும் சேனல்களுக்கான பணத்தை மட்டும்தான் வசூலிக்க வேண்டும் என்பதை முறைப்படுத்தவே இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.

இதனால், கேபிளுக்கு அதிக தொகை செலுத்தவேண்டி வருமோ?

கண்டிப்பாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட சேனல் பார்க்க எவ்வளவு பணம் கட்ட வேண் டும் என்பது இதுவரை கேபிள்காரர்களுக்கும், நீங்கள் பயன்படுத்தும் டிடீஎச் நிறுவனத் துக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது. அது தற்போது வெளிப்படை ஆகி யிருக்கிறது. எந்தெந்த சேனல் எவ்வளவு கட்டணம் வாங்குகிறார்கள் என்பது இனி மக்கள் எல்லோருக்குமே தெரிய ஆரம்பித் துள்ளது. மக்கள் என்ன சேனல் பார்க்கிறார் களோ, அந்த சேனலுக்கு மட்டும்தான் பணம் தரப் போகிறார்கள். உதாரணமாக, சிலர் உலகக் கோப்பை நேரத்தில் மட்டும்தான் கிரிக்கெட் பார்ப்பார்கள். ஆனால், அதுக்காக வருஷம் முழுக்க ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பணம் கட்டுவார்கள். அதுபோன்ற நிலை இனி இல்லை. அந்தமாதிரி நிறைய சேனல்களை இனி மக்களே வடிகட்டிக்கொள்ள முடியும். தங்களுக்கு பிடித்த முக்கியமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து, அதற்கு மட்டும் பணம் கட்டிப் பார்க்கலாம். எனவே, கேபிளுக்கான செலவு குறையவே வாய்ப்பு உள்ளது.

சேனல்களுக்குதான் விளம்பரங்கள் வாயி லாக நிறைய வருமானம் கிடைக்கிறதே. பின்னர், எதற்காக சேனல்களை கட்டண சேனலாக்கி, இந்த சுமையை மக்கள் தலையில் சுமத்துகிறார்கள்?

விளம்பரங்கள் மூலமாக சேனல்களுக்கு வருமானம் வருவது எப்போதும் போலத்தான் இப்போதும் நடக்கிறது. முன்பே சொன்னதுபோல, இது ஏற்கெனவே மக்கள் செலுத்தி வந்த தொகைதான். எவ்வளவு கொடுக்கிறோம்? நாம் ஏன் இவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட விஷயங்கள் இப்போதுதான் வெளியே தெரிய வருகிறது.

கடைக்குப் போய் நம் வீட்டுக்கு அரிசி எவ்வளவு வேண்டும்? சர்க்கரை எவ்வளவு வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். கடைக்காரர் முடிவு செய்யக்கூடாது. அதுதான் தற் போது தொலைக்காட்சி சேவையிலும் அமலுக்கு வந்திருக்கிறது. டிவி சேனல் களுக்கான விலைப் பட்டியல் நாடு முழுவதும் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

எங்களது ஜீ தமிழ் சேனல் மாதம் ரூ.10 என கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதுபோல அனைத்து சேனல்களும் தங்களது கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளன. பார்க்கிற சேனல்களுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்பது மட்டுமின்றி, இந்த புதிய திட்டம் மூலமாக வேறு பல பயன்களும் உண்டு. மக்கள் எந்த சேனல்களில், என்ன நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர்? சேனல்களில் இன்னும் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங் களையும் கணிக்க முடியும். ஆகவே இது ஆரோக்கியமான திட்டமே.

கட்டணம் விதிக்கப்படுவதால், சில சேனல்களுக்கு பார்வையாளர்கள் குறைய வாய்ப்பு இருக்குமா?

பொழுதுபோக்கு அம்சங்களுக்காகத் தான் சேனல்கள். அந்த வகையில், நல்ல நிகழ்ச்சிகளை பொறுப்போடு அளித்துவரும் எந்த சேனலுக்கும் இது பாதிப்பாக இருக்காது. இன்னும் பல நல்ல, தரமான நிகழ்ச்சிகளை மக்களுக்கு தரவேண்டும் என்கிற உத்வேகமும், பொறுப்பும் அதிகரிக் கவே செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்