பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 10-ம் தேதி ரஜினி நடித்த ‘பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாக இருக்கின்றன. இதில், ‘பேட்ட’ ட்ரெய்லரில் இடம்பெற்ற வசனங்களுக்குப் பதில் சொல்வதுபோல் ‘விஸ்வாசம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
இதனால் ரஜினி - அஜித் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வேண்டுமென்றே ‘பேட்ட’ ட்ரெய்லருக்குப் பதிலடி கொடுப்பது போல் தான் ‘விஸ்வாசம்’ ட்ரெய்லர் தயார் செய்யப்பட்டதா? என படத்தின் எடிட்டர் ரூபனிடம் கேட்டேன்.
“இல்லை, தற்செயலானது தான். 20-ம் தேதியே இந்த ட்ரெய்லரைத் தயார்செய்து விட்டோம். கிறிஸ்துமஸை முன்னிட்டு 25-ம் தேதி ட்ரெய்லரை ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியாததால், தள்ளிப்போனது. அதன்பிறகு ‘பேட்ட’ ட்ரெய்லர் ரிலீஸானதால், ஒருநாள் இடைவெளிவிட்டு ‘விஸ்வாசம்’ ட்ரெய்லரை ரிலீஸ் செய்தோம். எனவே, அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
சொல்லப்போனால், ‘வீரம்’ ட்ரெய்லரும், ‘விஸ்வாசம்’ ட்ரெய்லரும் ஒரே மாதிரியே இருக்கும். அதே நேட்டிவிட்டி ஃபிலிம், அதே எமோஷன்ஸ், அதே மாஸ் இதிலும் இருக்கும். ‘பேட்ட’ ட்ரெய்லருக்கும், ‘விஸ்வாசம்’ ட்ரெய்லருக்கும் ஒற்றுமைகள் இருக்கிறது என்றால், அது தவிர்க்க முடியாதது.
20-ம் தேதியே தயார்செய்து வைத்த ட்ரெய்லரை மறுபடியும் மாற்றுவது என்பது மிகப்பெரிய வேலை. ரிலீஸும் அருகில் இருப்பதால் வேறு ஆப்ஷனே இல்லை. எனக்கு ‘பேட்ட’ ட்ரெய்லரும் பிடித்திருந்தது. பதில் சொல்லும் நோக்கத்துடன் நான் ட்ரெய்லரைத் தயார் செய்யவில்லை. ‘பேட்ட’ ட்ரெய்லர் இப்படித்தான் இருக்கும் என முன்கூட்டியே நான் யூகித்துப் பண்ண முடியாதில்லையா?
என்னை டேக் பண்ணி நிறைய மீம்ஸ் வந்தது. அதைப் பார்த்து சிரிச்சுட்டுப் போயிடலாம், அவ்வளவுதான் நாம பண்ண முடியும். இப்படியும் எடுத்துக்குறாங்க என்ற எண்ணம் இருந்தது. இரண்டு பேரோட ரசிகர்களுக்கு இடையில சண்டை மூட்டி விட்டுட்டீங்கனு கூட சொன்னாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு மாஸான ட்ரெய்லரைத் தயார் பண்ணணும்னு நினைச்சுத்தான் ‘விஸ்வாசம்’ ட்ரெய்லரைத் தயார் செய்தேன்” என்றார் ரூபன்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago