விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பாவனா. இவர், போட்டியாளர்களின் நடன அரங்கேற்றத்துக்கு இணையாக ஆடைகளில் கவனம் செலுத்தி பார்வையாளர்களை ஈர்க்கிறார். அவருடன் தொடர்ந்து பேசியதில் இருந்து..
ஜோடி நிகழ்ச்சிக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்?
சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பரபரப்பான நிகழ்ச்சிக்குள் வந்திருக்கேன். அதோடு, இப்போ எடையை ரொம் பவே குறைச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி என்னால யோசிச்சுக் கூட பார்க்க முடியாத ஆடைகளை எல்லாம் இப்போ போட்டுக்கொள்ள முடியும்கிற அளவுக்கு முன்னேறிட் டேன். அதனால, ஜமாய்க்கலாம்னு இறங்கிட்டேன். திகில் ரவுண்டு, டூயட் சுற்று என ‘ஜோடி’ நிகழ்ச்சி செமயா போகுது.
இப்போ எல்லாம் நிகழ்ச்சியை வழங்கும்போது தொகுப்பாளர் களும் ஆடல், பாடல், நடிப்பு என இறங்கிவிட்டீர்களே?
உண்மைதான். முன்பு இருந்த சூழல் இப்போது இல்லை. அதுவும் விஜய் டிவியின் மேடையில் ஒரு தொகுப்பாளர் நின்றால்கூட, அவங்களையும் நடிகரா, நடனத்துல அசத்துறவங்களா, காமெடியில கலக்குறவங்களாத்தான் பார்வை யாளர்கள் பார்க்குறாங்க; பார்க்க விரும்புறாங்க. அதுக்காக எல்லா விதத்துலயும் தயாரா இருக்குறது அவசியமா இருக்கு. சமீபத்தில்கூட, சச்சு - நாகேஷ் நடிச்ச ‘மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்’ பாட் டுக்கு நானும் ரியோவும் ஸ்டேஜ்ல ஆடினோம். செம அப்ளாஸ்!
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச் சிகள் பற்றி?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேன லுக்கு கபடி, கிரிக்கெட்னு ஓடிக்கிட் டிருந்த நேரத்திலேயே, ஆங்கில சேனலுக்கும் விளையாட்டு நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கினேன். தொடர்ந்து அந்த வேலைகள் வேகமா நடந்துட்டு வருது. அதுவும், இந்த 2019-ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளும் வரப்போகுது. இந்த பிப்ரவரியில் இருந்தே பரபரப்பு ஆரம்பம். அடுத்து உலகக் கோப்பை என, விளையாட்டுலயும் இனிமே செம பிஸிதான்!
அடுத்த ‘மாஷ்அப்’ ‘தனி ஆல்பம்’ போன்ற வேலைகளை முடித்துவிட்டீர்களாமே?
ஆமாம். எனக்கு நாய்க்குட்டி கள்னா ரொம்ப பிடிக்கும். அந்த ‘தீம்’ வைத்தே இம்முறை ஒரு ஆல்பம் ரெடி பண்ணிட் டேன். இது என் 2-வது முயற்சி. இந்த ஆல்பத் தில் ‘புஸ்கா’, ‘லக்கி’, ‘ஹேப்பி’ என்ற நாய்க் குட்டிகள் நடிச் சிருக்காங்க. அதில் ‘புஸ்கா’ தான் நான் வளர்க் கும் நாய்க்குட்டி. ஆங் கிலம், தமிழ் என்று கலந்து இந்த மாஷ்அப் ஆல்பம் ரெடி பண்ணியிருக்கோம். என் நண்பரான சந்தோஷ் இதில் சக நடிகரா வர்றார். அவர் காடுகளில் சுற்றுப்பயணம் செய்பவர். எனக்காக இந்த ஆல்பத்தில் நடித்துக் கொடுத்தார். இதைப் பொங்கல் பண்டிகைக்கு முன்பு ரிலீஸ் செய்ய உள்ளோம்.
நம்ம இளையராஜா சாரோட ‘ரோஜாப்பூ ஆடி வந்தது’ பாடலோடு ஓர் ஆங்கில பாட்டையும் சேர்த்துதான் இந்த ஆல் பத்தை உருவாக்கியுள் ளேன். எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். செல்லப் பிராணி பிரியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்!
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago