உலகக் கோப்பையை திருடப் போகிறேன்- கயல் சந்திரன் நேர்காணல்

By மகராசன் மோகன்

‘பார்ட்டி’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, ‘டாவு’, ‘நான் செய்த குறும்பு’ என நடிகர் சந்திரனின் இந்த ஆண்டு ரிலீஸ் படப் பட்டியல் நீள்கிறது. புத்தாண்டு தினத்தை மனைவி தொகுப்பாளினி அஞ்சனா, மகன் ருத்ராக்‌ஷுடன் கொண்டாடிவிட்டு ‘டாவு’ படப்பிடிப்புக்கு வந்தவரை சந்தித்தேன்.

‘கயல்’ மாதிரி முழுக்க காதல் களத் தில் அறிமுகமாகி நடித்தவர். இப்போது காமெடி, குறும்புத்தனம் என மாறுவது போல தெரிகிறதே?

இயக்குநர் பிரபுசாலமனிடம் இருந்து வெளியே வந்ததால் பொறுப்பான கதை களையே தேர்வு செய்து வருகிறேன். படம் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கிற வகையான கதைகளையோ, காமெடி விஷயங்களையோ தொடக்கூடாது என்பதில் தெளிவா இருக்கேன்.

‘பார்ட்டி’ படத்தில் எல்லாமும் கலந் திருப்பதாக விமர்சனம் இருக்கே?

‘சரோஜா’, ‘கோவா’ மாதிரி வேறொரு பாணியில் இருக்கும். நிச்சயம் குழந்தை களோடு வந்து பார்க்கிற விதமாகத்தான் இருக்கும்.

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தில் உலகக் கோப்பையை திருடுவது தான் களமாம். அதைத் திருடி என்ன செய்றீங்க?

படத்தோட ஆரம்பத்திலேயே 4 பசங்க ஒண்ணாச் சேர்ந்து உலகக் கோப்பையை திருடிடுறாங்க. அதுக்குப் பிறகு என்ன நடக்குது என்பதுதானே கதை. ரொமான்ஸ் இல்லை. காதல் இல்லை. ஜாலியா இருக்கும். படம் முழுக்க ரெடி. சரியான நேரத்துல ரிலீஸுக்கு கொண்டு வரணும்.

தொடர்ந்து காமெடி வகையாக தொடுகிறீர்களே. முழு நீள ஆக்‌ஷன் படம் எப்போது?

எல்லா நடிகர்களுக்குமே பத்து பேரை அடிக்கிற பக்கா ஆக்‌ஷன் ஹீரோவா ஜொலிக்கணும்னு ஆசை இருக்கும். எனக்கும் அந்த விருப்பம் உண்டு. இப் போதைக்கு தியேட்டர்ல ரூ.120 பணம் கொடுத்து படம் பார்க்கிற ஒரு ரசிகன் மனநிலையில்தான் நானும் இருக்கேன்.

ஆடியன்ஸ் மனநிலையில் இருந்து பார்க்கும்போது இன்னும் கொஞ்ச காலம் ஆகட்டும்னு எனக்கே தோணுது. அப்படி யோசிக்கும்போது அடுத்தடுத்தப் படங்கள் ஒவ்வொண்ணா வெளியாகட்டும். இதுக்கெல்லாம் ஒரு ரீச் கிடைக்கும். அப்போ வந்து பக்கா ஆக்‌ஷன் களத்தில் விளையாடுவோம்.

உங்களைச் சேர்ந்த சக நடிகர்கள் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் கதைகளைத் தேர்வு செய்கிறார்களே?

கண்டிப்பாக. நல்ல கதைகள் அமைந் தால் நடிப்பேன். ரெண்டு ஹீரோக்கள் படம் முதலில் தயாரிப்பாளருக்கு பிசினஸ் விஷயத்தில் பெரிய பலமாக இருக்கும்.

‘கும்கி 2’ இயக்கும் வேலையில் பிரபுசாலமன் இறங்கிவிட்டார். ‘கயல் 2’ பற்றி பேசிப் பார்த்தீர்களா?

‘கயல்’ படத்துல அவரோட மனசுக்கு பிடித்ததாலதான் அடுத்து ‘ரூபாய்’ படத்தை தயாரிக்கும்போது நடிக்க வைத்தார். ‘கயல் 2’ ஆரம்பித்தால் உடனே ஓடிப்போய்டுவேன்.

‘நான் செய்த குறும்பு’ படத்தில் ஒரு ஆண், குழந்தை சுமப்பது போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் லாஜிக் விஷயங்கள் இருக்குமா?

‘காதலிக்கிற பருவம் தொடங்கி, தம் பதிகளாவது, 60-வது திருமணம் செய்கிற ஸ்டேஜ்ல இருக்குற ஒரு ஆண்’ வரைக் கும் இந்தப் படத்தை தன்னோட துணையை அழைத்து கொண்டுபோய் ‘ஒரு ஆண் எப்படியெல்லாம் கஷ்டப்படு கிறான்’னு காட்டுற விதமா படம் இருக் கும். ஒரு ஆண், குழந்தை சுமக்க முடியும் என்பதை மருத்துவரீதியாக சில விஷயங் களைக் கொண்டு படத்தில் இயக்குநர் லாஜிக்கோடு கையாண்டிருக்கிறார். அது வெளிவரும்போது தெரிய வரும்.

உங்க மனைவி அஞ்சனா மீண்டும் எப்போது சின்னத்திரைக்கு வர்றாங்க?

இன்னும் சில வாரங்களில் வந்துடு வாங்க. இப்போது வரைக்கும் அவங் களோட முழு நேரமும் மகன் ருத்ராக்‌ஷ் வசம் இருந்தது. இனி வீட்டுல பெரியவங்க பார்த்துக்கலாம்கிற ஸ்டேஜ்ல பையன் வளர்ந்துட்டான். இனி சேனலுக்கு வந்துடுவாங்க.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்