மனம்தான் எனக்குப் பிடித்த இசைக்கருவி. அது அனைவரிடமும் இருக்கிறது. இந்த அற்புதமான சொத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தினால், சிறப்பான பாதையில் பயணிக்க முடியும் என்று இசைமைப்பாளர் இளையராஜா கூறினார்.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஜூன் மாதம் தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதை அவரது பவள விழா ஆண்டாக உள்நாட்டிலும், வெளிநாடு களிலும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரியில் நேற்று நடத்தப்பட்ட விழாவில் இளையராஜா கலந்துகொண்டார்.
அவர் பேசியதாவது: நூற்றாண்டு கடந்த ராணி மேரி கல் லூரியை கடந்த 48 ஆண்டுகளாகப் பார்க் கிறேன். மிகவும் பழமையான கல்லூரி. உதவி இசையமைப்பாளராக சுற்றியபோது, இக்கல்லூரி முன்பு பாடிக்கொண்டே திரிந் திருக்கிறேன். முதல் படமான ‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் உருவாவதற்கு முன்பு அந்த டியூன்களை இப்பகுதியில் செல்லும் போது முணுமுணுத்துக்கொண்டே சென் றிருக்கிறேன். அது ஒரு மகிழ்ச்சியான காலகட்டம்.
இயக்குநர்கள் சொல்லும் சூழலுக்கு 3 விதமான டியூன்களை போட்டுக்கொடுப்பது என் வழக்கம். அந்தப் பாடல்கள் எனக்குள் எப்படி வந்தன? எனக்குள் ஒரு உணர்வை தூண்டிவிட்டு, அவை பாடலாக உருவாகியுள்ளன.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்கு பாடல் எழுதும்போது ஒரு சூழல். சிகை திருத்தும் கலைஞரின் மகனுக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம். ஒரு சந்தர்ப்பத்தில் அவன் எழுதிய கவிதைகள் தண்ணீர் பட்டு அழிந்துவிடுகின்றன. பாடலைப் பாடியே தீரவேண்டிய சூழல். கற்பனை வெடித்து சிதறும் விதமான அந்தச் சூழலுக்காக உருவாக்கியதுதான் ‘மாஞ்சோலை கிளிதானோ; மான்தானோ’ பாடல். இந்த கற்பனை எனக்குள் உதித்தது. இதே கற்பனை வேறொருவருக்கு உதிக்காது. ஒரு டியூனை கெடுக்காமல் பாட்டு எழுதிய கவிஞர்களில் முதல் இடம் கவியரசு கண்ணதாசனுக்குத்தான். எந்தப் பாடலாக இருந்தாலும், அவர் யோசித்துப் பார்த்ததே இல்லை. அவர் ஒரு ஹீரோ மாதிரிதான் எனக்கு தெரிந்தார். ‘தேன் சிந்துதே வானம்’ பாடல் உருவான நேரத்தில், இதை உடன் இருந்து பார்த்திருக்கிறேன்.
இவ்வாறு இளையராஜா கூறினார். பின்னர், கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்வி களுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.
கல்லூரி படிப்பை தொடர முடியவில் லையே என்ற வருத்தம் உண்டா?
படிக்கும் படிப்புக்கும், செல்லும் வேலைக்கும், வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. நான் படித்த படிப்புக்காக எந்தக் கல்லூரிக்கும் போனதில்லை. அதான் இங்கு வந்துவிட்டேனே. இதுபோல பல கல்லூரிகளுக்கு போய்க்கொண்டு இருக்கிறேன்.
இசையமைப்பாளர் ஆகாமல் இருந் திருந்தால்?
இசைக் கலைஞராக இருந்திருப்பேன். அதுவும் இல்லையா.. நான் வேறு என்னவாகி இருந்தால் நீங்கள் சந்தோஷப் பட்டிருப்பீர்கள்?
நீங்கள் முதலில் சென்ற வெளிநாடு எது? அங்கு கிடைத்த மறக்கமுடியாத அனுபவம் பற்றி?
‘அன்னக்கிளி’, ‘பத்ரகாளி’, ‘தீபம்’ ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்த பிறகு மலேசியாவுக்கு ஒரு கச்சேரிக்காக சென்றேன். 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அந்த மேடையில், பாடகர் டி.எம்.சவுந்தர ராஜன் என்னை மட்டம்தட்டிப் பேசியது மறக்க முடியாத நிகழ்வு.
சென்னைக்கு எப்போது வந்தீர்கள்?
1968 மார்ச். தேதி ஞாபகம் இல்லை.
யாரிடம் ஆட்டோகிராஃப் வாங்க நினைக்கிறீர்கள்?
இசையமைப்பாளர் எம்எஸ்வி அண் ணாவை சந்தித்து ஆசிர்வாதமும், அன்பையும் பெற வேண்டும் என விரும்பியிருக்கிறேன். அவரது அன்பையும் பெற்றுள்ளேன்.
பல இசைக்கருவிகளை வாசிக்கும் உங்களுக்கு பிடித்த இசைக்கருவி?
என் மனம்தான் எனக்கு பிடித்த இசைக் கருவி. என்னிடம் மட்டுமல்ல; உங்கள் எல்லோ ரிடமும் இது இருக்கிறது. அந்த அற்புதமான சொத்தை நல்ல விஷயங்களுக்கு பயன் படுத்துங்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் தராதீர்கள். அப்படி செய்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். சரியான பாதையில் பயணிக்க முடியும்.
வெள்ளை ஆடைக்கு மாறியது ஏன்?
மூகாம்பிகை பக்தனாக மாறிய தருணம், இனி இதுதான் நமக்கான ஆடை என்று முடிவெடுத்தேன். அதுவரை, அந்தந்த காலகட்டத்தில் வரும் எல்லா வகையான ஆடைகளையும் போட்டிருக்கிறேன்.
யாருடன் இணைந்து டூயட் பாடல் பாட விரும்புகிறீர்கள்?
ஆஷா போஸ்லே. சிறந்த பாடகி. அவர் வந்துவிட்டாலே, எனக்கு கற்பனைகள் பெருக்கெடுக்கும். ஒரு பாடல் பதிவு செய்ய வந்தால், அந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாதே என்று மேலும் 2 பாடல்களை பாட வைத்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago