விஜய் ஆண்டனி நடிக்கும் 'தமிழரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'திமிரு புடிச்சவன்' படத்தைத் தொடர்ந்து 'கொலைகாரன்', 'அக்னி சிறகுகள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் ஆண்டனி.
'தமிழரசன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று (ஜனவரி 18) நடைபெற்றது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். மேலும், படப்பிடிப்பையும் க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் நடிக்கவுள்ளார். விஜய் ஆண்டனியும், பிரணவ் மோகனும் நடிக்கும் காட்சியைத் தான் இளையராஜா க்ளாப் அடித்து துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 'டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜாவின் மகனும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago