அஜித் சாருடைய கரியர் பெஸ்ட் விஸ்வாசம்; வசூல் அதிகரிப்பால் மகிழ்ச்சி: விநியோகஸ்தர் பேட்டி

By கா.இசக்கி முத்து

அஜித் சாருடைய கரியர் பெஸ்ட் 'விஸ்வாசம்' தான், தொடர்ச்சியாக வசூல் அதிகரிப்பதால் மகிழ்ச்சி என்று விநியோகஸ்தர் சக்திவேலன் தெரிவித்தார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ரஜினி நடித்த ’பேட்ட' படத்துடன் வெளியானதால், 'விஸ்வாசம்' படத்துடன் வசூல் எப்படியிருக்கும் என்று முதலில் விநியோகஸ்தர்கள் பயந்தார்கள். ஆனால், இரண்டு படங்களுமே இதுவரை நல்ல வசூல் செய்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். இரண்டு நடிகர்களின் ரசிகர்களுமே எங்கள் படம் தான் வசூல் அதிகம் என்று இணையத்தில் சண்டையிட்டு வருகிறார்கள்.

உண்மையில் 'விஸ்வாசம்' வசூல் எப்படியுள்ளது என்று திருச்சி - தஞ்சாவூர் ஏரியாவில் இப்படத்தின் விநியோகம் செய்துள்ள சக்திவேலனிடம் கேட்டோம்.

அப்போது அவர் கூறியதாவது:

''உண்மையில், இப்படத்தின் தமிழ்நாடு உரிமையைத் தான் வாங்க வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் முதல் விஷயம் மாஸ் ஹீரோ அஜித், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள 'விஸ்வாசம்' படத்தில் அவர் நடித்திருப்பது மிகவும் சிறந்தது. இரண்டாவது அஜித் - சிவா காம்பினேஷன். 

'கீதகோவிந்தம்' படத்தின் வெற்றிக்காக ஹைதராபாத்துக்கு விஜய் தேவரகொண்டாவைப் பார்க்க ஞானவேல்ராஜா சாருடன் சென்றேன். அப்போது ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இயக்குநர் சிவா சாரைப் பார்த்தேன். 'விஸ்வாசம்' படத்தைப் பற்றி அவர் பேசிய வார்த்தைகளில் நம்பிக்கை மிளிர்ந்தது. அப்போதே, இப்படம் அஜித் சாருடைய கேரியரில் பெஸ்ட்டாக இருக்கும் என எண்ணினேன். அதுபோக தம்பி ராமையா சார் உள்ளிட்ட படத்தில் நடித்தவர்கள் அனைவருமே இப்படம் தொடர்பாக பிரமிப்பாக பேசினார்கள்.

இப்படத்துக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள் பாருங்கள் என்றார்கள். அது தான் இப்போது நடந்திருக்கிறது. 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தமிழகத்தில் நான் தான் விநியோகம் செய்தேன். அப்படம் எவ்வளவு பெரிய வெற்றி என்பது அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் ’விஸ்வாசம்’ அஜித் சார் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' ஆகப் பார்க்கிறேன். 

இதுவரை அஜித் சார் நடிப்பில் வெளியான படங்களின் வசூலை நாள் கணக்காக எடுத்துப் பார்த்தால், அனைத்துமே ஒரே ரேஞ்சில் இருக்கும். இப்படம் ஒவ்வொரு நாளின் வசூலுமே ஏற்றமாக இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களிடையே ஒவ்வொரு நாளும் வரவேற்பு கூடிக் கொண்டே இருக்கிறது. நேற்றும் (ஜனவரி 15), இன்றும் (ஜனவரி 16) பயங்கரமான வரவேற்பாக உள்ளது. அவருடைய நடிப்பில் வந்த படங்களில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டராக 'விஸ்வாசம்' இருக்கும்.

ரஜினி சாருடைய 'பேட்ட' படத்துடன் வந்துள்ளது 'விஸ்வாசம்'. அப்படியிருந்துமே தமிழக வசூலில் ஷேராக 55 கோடி முதல் 60 கோடி ரூபாய் வரை வரும் என நம்புகிறேன். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதைப் பார்க்கையில் 70 கோடி முதல் 80 கோடி வரை ஷேராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒவ்வொரு படத்தின் வசூலைப் பார்க்கும் போதும், ஏன் இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்தது என்று எண்ணுவார்கள். அது போல் அல்லாமல் வரும் காலத்தில் சூப்பர் வசூல், மக்களிடையே வரவேற்பு இரண்டும் சேர்த்து 'விஸ்வாசம்' மாதிரி ஒரு படம் பண்ணனும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு மக்களுடைய மனதில் படத்தின் கதைகளம் மூலம் குடிகொண்டு விட்டார்கள் அஜித் - சிவா கூட்டணி.

எனக்கு இந்த வாரத்தில் நான் போட்ட பணம் வந்துவிட்டது. அடுத்த வாரத்திலிருந்து லாபம் தான். எனக்கு மட்டுமல்ல திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் என அனைவருமே பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறோம்''.

இவ்வாறு சக்திவேலன் தெரிவித்தார்.

'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து 'சர்வம் தாளமயம்', 'வர்மா', 'உறியடி 2' ஆகிய படங்களின் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ளார் சக்திவேலன். மேலும், ராஜேஷ் - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தை தன் நண்பருடன் இணைந்து தமிழக உரிமையை வாங்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்