தொழில்நுட்பக் கலைஞர்கள் வாழ்க்கைத்துணை போல!- ‘அதோ அந்த பறவை போல’ இயக்குநர் கே.ஆர்.வினோத் நேர்காணல்

By மகராசன் மோகன்

அமலாபால் முன்னணி கதா பாத்திரம் ஏற்று நடித்து வெளி வரவுள்ள முதல் திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல’. முழு படப்பிடிப்பையும் முடித்து, தயாரிப் புக் குழுவுடன் ரிலீஸுக்கான வேலை களைக் கவனித்துக் கொண்டிருக் கிறார் அறிமுக இயக்குநர் கே.ஆர். வினோத். அவருடன் ஒரு நேர்காணல்...

படத்தின் போஸ்டர், புகைப்படங் களைப் பார்க்கும்போது வனம் சார்ந்த களம்போல தெரிகிறது? அந்த வரிசை யில் பல படங்கள் வரும்போது, இதில் என்ன புதுமை?

இது டிரக்கிங் சார்ந்த களம். அதற்கு காட்டுக்குத்தானே போக வேண்டும். இந்த மாதிரி ஒரு களம் எங்க திரைக்கதைக்கு தேவைப்பட்டதால் படம் முழுக்க வனத்தை மையமாகவே வைத்து பயணித்திருக்கிறோம். அதுவும் வயநாடு போன்ற அடர்ந்த காட்டின் பின்னணியில் படமாக்கி உள்ளோம்.

அடர்ந்த காட்டில் கதாநாயகி அமலாபாலுக்கு என்ன வேலை?

செல்போன் சிக்னல் இல்லாமல், மனிதர்களை எந்த சூழலிலும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு சூழலில் மாட் டிக்கொள்ளும் அமலாபால் அங்கி ருந்து எப்படி வெளியே வருகிறார் என் பதுதான் களம். எல்லா பெண்களுக்கும் ஓர் உதாரணமாக அந்த கதாபாத் திரத்தை வைத்திருக்கிறோம்.

இது நாயகியை மையமாகக் கொண்ட படம். முதல் பட இயக்குநராக உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

இது ஹீரோ, ஹீரோயின் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய கதை அல்ல. கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட களம். அதற்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தார் அமலாபால். கதையை சொன்னதும் அதற்கான மெனக்கெடல்களில் உடனடியாக இறங்கினார். அந்த ஈடுபாடுதான் எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பாக இருந்தது. நினைத்ததை அழகாக பிரதிபலிக்கவும் முடிந்தது.

முதல் படத்தை நீங்களே எழுதாமல் மற்றொரு கதாசிரியரின் கதையை படமாக்க நினைத்தது ஏன்?

நண்பர் ஏ.ஆர். என்பவரின் கதை தான். ஆனாலும், என் எண்ணம் சார்ந்தே இருந்தது. அவரே திரைக்கதை, வசன மும் எழுதினார். இயக்கம் மட்டுமே என் வேலை. நமக்கு அமைகிற டெக்னீஷியன்கள் நமது வாழ்க்கைத் துணை போல. நாமே எல்லாவற்றையும் சுமந்துகொண்டு ஓடுவது ஒரு பாணி. அதிலும் ஜெயிக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொரு வர் எடுத்துக்கொண்டு செய்யும்போது அது இன்னும் கூடுதலான சிறப்பை பெறும் என நினைக்கிறேன். பலமாக வும் இருக்கும். இயக்கம், திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் ஒவ்வொரு வர் ஏற்று செய்யும் முறை மலை யாளம், இந்தி பட உலகில் ஏராளம். இங்கும் உள்ளது. அது ஒரு நல்ல முறை என்பதால் தொட்டேன். தொடர்ந்து செய்வேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்