சமீபத்தில் வெளிவந்த ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் எதையும் ஓ.கே. பண்ணல. அதிக நேரம் எடுத்தாலும் பரவாயில்லை... நல்லதா அமைஞ்சதும் தொடலாம். இப்போ கிடைத்திருக்கிற இந்த இடத்துக்கு வர 6 வருஷங்களுக்கு மேல போராடியிருக்கேன். அதே ஸ்பீடுல அப்படியே ஏறுமுகமா இருக்கணும்... என்கிறார் விஷ்ணு விஷால்.
‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஜகஜால கில்லாடி’, ‘காடன்’ என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கும், படப்பிடிப்புக்கும் தயாராக இருந்து வரும் நிலையில் அவருடன் ஒரு நேர்காணல்...
‘ராட்சசன்’ போன்ற சீரியஸான படத்தில் நடித்துவிட்டு மீண்டும் காமெடி பக்கம் இறங்கியது ஏன்?
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படப்பிடிப்பின் போதே, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கதையை இயக்குநர் செல்லா அய்யாவு சொன்னார். ஜாலியா இருக்கே. நம்ம பேனர்லயே செய் வோம்னு திட்டமிட்டு தொடங்கின படம் அது. ‘ராட்சசன்’ சீரியஸ் போலீஸ், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ காமெடி போலீஸ். இது என் சொந்த படம். சீரியஸ் போலீஸையும், காமெடி போலீஸையும் அடுத் தடுத்து விடவேண்டாம் என்று தான் காத்திருந்தேன். இப்போகூட ரிலீஸ் செய்யலைன்னா அடுத்து ‘ஜகஜால கில்லாடி’, ‘காடன்’னு வந்துடும். அதனாலதான் இப்போ வந்தே தீருவோம்னு வர்றோம்.
என்ன கதை?
ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ் அதிகாரிகளுக்கு பன், டீ, காபி எல் லாம் பொறுப்பா வாங்கிக்கொடுத் துட்டு, வேற எந்த வேலையும் செய் யாம ஜாலியா இருக்குற போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம். திடீர்னு ஒரு பெரிய ரவுடியை பிடிக்கிற மாதிரி அவனது சூழல் மாறுது. இதுதான் கதை. அதுல ரெஜினா, ஓவியா, யோகிபாபுன்னு ஒரு பெரிய பட்டாளமே வர்றாங்க.
‘காடன்’ படப்பிடிப்பு எந்த நிலை யில் இருக்கிறது?
பிரபு சாலமன் படம். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் வளரும் படம். ஒரு ஷெட்யூல் போய்ட்டு வந்துட்டோம். அதில் யானைப் பாகனாக நடிக்கிறேன். மூணாறு உள்ளிட்ட காட்டுப் பகுதி களில் படப்பிடிப்பு நடத்துறோம். உடனே ‘கும்கி 2’ என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமா இருக்கும். இதில் ராணா 50 வயது நபரா நடிக்கிறார்.
வித்தியாசமான படங்களோடு, ‘கதாநாயகன்’ மாதிரி கதையே இல்லாத படத்திலும் நடிக்கிறீர்களே?
அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. நான் முதலில் ‘வீர தீர சூரன்’னு ஒரு படம் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பிச்சேன். சில பிரச் சினைகளால நடுவுலயே அது நின்னுபோச்சு. அந்த சூழலில் எடுக்கப்பட்ட படம்தான் ‘கதா நாயகன்’. ஆனா எனக்கு நடிப்பு, அனுபவம்னு சில விஷயங்களை அந்த படம் கற்றுத் தந்தது.
தயாரிப்பாளர்கள் சங்கம் மீது என்ன கோபம்?
எந்த படமும் வராத சூழலில், டிசம்பரில் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ஒரு தேதியை குறித்துக்கொடுத்து, ஓகேன்னும் லெட்டர் வாங்கிட்டோம். அந்த நேரத்துல ஏதாவது மிடில் பட்ஜெட் படங்கள் வந்தாலும் அனுமதிக்கிறோம்னு சொன்னாங்க. ஆனா, ‘சீதக்காதி’, ‘அடங்க மறு’, ‘கனா’, ‘மாரி 2’ என அந்த தேதியில் ஏகப்பட்ட படங்களின் அறிவிப்பு வந்துக்கிட்டே இருந்தது.
இப்படியெல்லாம் வந்தா, நாங்க பின்னுக்கு போய்டுவோம்னு நினைச்சிருப்பாங்க போல. ஆனா, நாங்க விடல. அந்த பிரச்சினை தான். மற்றபடி தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம் இல்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago