பூஜா தேவரியா... தியேட்டர் ப்ளே நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்தும் நடிகைகள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர். தமிழில் ‘இறைவி’, ‘குற்றமே தண்டனை’ ‘ஆண்டவன் கட்டளை’ படங்களைத் தொடர்ந்து, தற் போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ஓர் இனிய உரையாடல்:
சீரியஸ் கதாபாத்திரங்களாக ஏற்று வந்த பூஜா தேவரியாவுக்கு ‘அயோக்யா’ முதல் கமர்ஷியல் படம் மாதிரி தெரிகிறதே?
தியேட்டர் ப்ளே நடிகை என்றால் உடனே பாவப்பட்ட, வில்லி என சீரியஸ் படங்களில் மட்டும்தான் நடிப்போம் என்கிற ஒரு பார்வை இருக்கிறது. குறிப்பிட்ட சில கிரியேட்டர் மத்தி யில் இருக்கும் இந்த பார்வை மாற வேண்டும். நீங்கள் சொன்னதுபோல ‘அயோக்யா’ எனக்கு பக்கா கமர்ஷியல் படம். விஷால் ஹீரோ. நான், ராஷி கண்ணா இருவரும் நாயகிகள். என்னோட பகுதி ரொம்பவே வித்தியாசமான விஷுவலாக இருக்கும். இயக்குநர் வெங்கட் மோகன் ரொம்ப திறமை சாலி. இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர். என்னோட முதல் நாள் ஷூட் அன்றைக்கு எடுத்து முடித்திருந்த ஒரு ஆக்ஷன் காட்சியை காட்டினார். மிரண்டு போனேன். படம் வைசாக், சென்னைன்னு பல இடங்களில் வளர்ந்து வருகிறது.
உங்களது பட நாயகன் விஷால் எப்படி? அவர் பப்ளிசிட்டிக்காகவே சில விஷயங்களைத் தொடர்ந்து செய்கிறார் என்ற பேச்சு இருக் கிறதே?
அவரைப் பற்றி வெளியே என்ன டாக் இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பார்த்தவரையில் நல்ல மனிதர். விலங்குகள், மனிதர்கள் என தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்யணும்னு பயணிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் தனக்கான கதாபாத்திரம் சிறப்பான பிரதிபலிப்புக்காக நுணுக்கமாக சில விஷயங் களைக் கையாள்கிறார்.
திறமையான நடிகை என பெயர் வாங்கியும் கோலிவுட்டில் இருந்து அவ்வப்போது காணா மல் போய் விடுகிறீர்களே?
எப்போதும் நான் கதைப் பார்த்து நடிப் பதை வழக்கமாக கொண்டவள். அதையும் கடந்து இங்கே ஒருவர் நல்ல நடிகை என்பதை யும் கடந்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள சரியான மக்கள் தொடர்பாளர்களை நியமித்துக்கொள்ள வேண்டும். அது எனக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. அதற்காக வரும் கதைகளை எல்லாம் டிக் அடிக்க மாட் டேன். முதலில் அது என்னை ஈர்க்க வேண்டும்.
சமீபத்தில் புத்தகம் எல்லாம் வெளி யிட்டிருக்கிறீர்கள் போல?
யுஎஸ் கான்ஸூலேட் சென்னை மற்றும் நாளந்தா வே பவுண்டேஷன் சார்பில் சமீபத் தில் நடந்த இளைஞர்களுக்காக நிகழ்ச்சியில் என்னோட புத்தகத்தை வெளியிட்டேன். லைட்ஸ், கேமரா, ஹூமன் இதுதான் புத்தகத்தோட தலைப்பு. மொத்தமே 24 பக்கங்க ள்தான்.
என்னோட வெப் பக்கத்தில் இலவச பிரதியாகவே எல்லோரும் படிக்கலாம். ஆங்கிலத்தில் ‘புல்லிங்’னு சொல்லு வோம். அந்த மாதிரியான கொடுமை களை நான் பள்ளி நாட்களில் அனுபவத்திருக்கிறேன். அந்த அனு பவம் தொடங்கி மனரீதியாக ஒருவர் குற்றம் செய்வதற்கு என்ன மாதிரியான காரணங்கள் என நீண்டு, தற்போ தைய சினிமா உல கத்துக்குள் நான் எப்படி டிரால் ஆனது என்பது வரைக் கும் இந்தச் சின்ன கையேடு பிரதி பலிக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago