‘96’ படத்தின் கன்னட ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கிறார் பாவனா.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தப் படத்தை பிற தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
தெலுங்கு ரீமேக்கில், நானி அல்லது அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்குகிறார். அங்கும் த்ரிஷாவே ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கன்னடத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ப்ரீதம் குப்பி இயக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் கோல்டன் ஸ்டார் கணேஷும், த்ரிஷா வேடத்தில் மலையாள நடிகை பாவனாவும் நடிக்கின்றனர்.
கன்னடத்தில் இந்தப் படத்துக்கு ‘99’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago