இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படம் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. அத்திரைப்படத்தில், அரசு மக்களுக்கு தரும் இலவச பொருட்களை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும், வில்லிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் ‘கோமளவல்லி’ என பெயரிட்டுள்ளதாகவும், புகார் எழுப்பி அதிமுக தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
சர்கார் திரைப்படக் குழுவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சென்னை, கோவை, மதுரை உட்பட பல மாவட்டங்களில் சர்கார் திரையிடப்படும் திரையரங்குகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போஸ்டர்களை கிழித்தனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க எடிட் செய்யும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக போலீஸ் அவரது வீட்டுக்கு சென்றுள்ளதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கமான பாதுகாப்புக்காகவே சென்றதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, போலீஸார் தனது வீட்டுக் கதவை பலமுறை தட்டியதாகவும், தான் அங்கு இல்லையென்றதும் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், போலீஸார் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை விரைந்து விசாரிக்குமாறும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மதியம் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago