இறைவனோடு தொடர்பில் இருந்தால் எல்லாம் தானாக நடக்கும்: யுவன்சங்கர் ராஜாவுடன் ஒரு சந்திப்பு

By மகராசன் மோகன்

‘‘எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவுதான். அவருடைய ஆன்மா என்னவாகியிருக்கும் என்ற கேள்விக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம்” என்று சொல்லும் யுவன்சங்கர் ராஜாவிடம் லேட்டஸ்ட் திரையுலக வாழ்க்கையைப் பற்றி சில கேள்விகளைக் கேட்டோம்

திரையுலக பயணத்தை திரும்பி பார்க்கும்போது எப்படி இருக்கிறது?

நான் இன்னும் திரும்பி பார்க்கவில்லை. அப்படி திரும்பிப் பார்த்தால் உட்காரவேண்டியதுதான்.

ஒரு படத்தை தேர்வு செய்வதில் கதை, இயக்குநர், ஹீரோ இந்த மூன்றில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

நான் இசைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். நான் இசையமைக்கும் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்று நான் பார்ப்பதில்லை.

ஒரு கதையில் இசைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதை வைத்துத்தான் நான் படங்களைத் தேர்வு செய்கிறேன்.

உங்கள் பாடல்களில் அப்பா இளையராஜாவுக்கு பிடித்த பாடல் எது? அதுபற்றி ஏதும் சொல்லியிருக்கிறாரா?

நான் அவரிடம் இதுபற்றி ஏதும் கேட்டதில்லை. நாங்கள் இருவரும் அதுபற்றி பேசிக்கொண்டதே இல்லை. நான் இரவில் வேலைகளை கவனித்துவிட்டு, காலையில் தூங்கப் போவேன். அப்பா அந்த நேரத்தில் ஸ்டுடியோவுக்கு புறப்பட்டு கிளம்புவார். பெரும்பாலும் அப்பாவை மாலை நேரத்தில்தான் பார்ப்பேன்.

சமூக வலைதளத்தில் இருந்து சமீப காலமாக விலகி இருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களை குறித்த அப்டேட்ஸ் டிவிட்டர் போன்ற தளத்தில் நிரம்பி வழிகிறதே?

சமீப காலமாக ஃபேமிலி குரூப் வாட்ஸ்அப் வந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

எப்போதும் நண்பர்கள் சூழந்து இருக்கும்படியான ஒரு சூழலை வைத்துக் கொள்கிறீர்களே?

குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோரும் நாங்கள் ஒன்றாக இருக்கிற மாதிரியான சூழலை உருவாக்கிவிடுகிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும்போது நாங்கள் ஜாலியாக இருப்பதுபோல தெரியும். ஆனால், எங்களுக்கும் வேலையின் காரணமாக மன அழுத்தமெல்லாம் இருக்கத்தான் செய்யும். அந்த மன அழுத்தத்தையெல்லாம் இது

போன்ற சூழல்தான் மாற்றுகிறது. சந்தோஷமான விஷயமாக இருந்தாலும், சோகமான விஷயமாக இருந்தாலும் பகிர்ந்துகொள்ள நல்ல குடும்ப உறவுகள், நண்பர்கள் மிகவும் முக்கியம்.

இசை தொடர்பான புதிய தேடல், ஆய்வு, பயணம் எதாவது?

அதற்கெல்லாம் நேரமே இல்லை. புதிது புதிதாக செய்வதற்கு எதுவும் பண்ணத் தேவையில்லை. இறைவனோடு தொடர்பில் இருந்தால்போதும். தானாக எல்லாம் நடக்கும். புதிதாக செய்வதற்கு அதற்குரிய கதைகள் வர வேண்டும். அப்போதுதான் அதற்குரிய ஆராய்ச்சியில் இறங்க முடியும். நாமே மற்ற வேலைகளை விட்டுவிட்டு ஆய்வில் இறங்கினால் அதில் அர்த்தமே இல்லையே.

‘அஞ்சான்’ படத்துக்கு இசை அமைத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள்?

இந்த படத்தின் ஆல்பம் முழுவதுமே படப்பிடிப்பு தளங்களில் உருவானதுதான். புனேயில் படப்பிடிப்பு நடந்தபோது ஒரு பாடல், கோவாவில் ஒரு பாட்டு, அடுத்து சென்னை என்று எங்கெல்லாம் ஷுட்டிங் நடந்ததோ அங்கெல்லாம் போய் கம்போஸிங் வேலை பார்த்தேன். எனக்கும், லிங்கு

சாமிக்கும் இடையில் எப்போதுமே ஒரு கெமிஸ்ட்ரி உண்டு. நாங்கள் இருவரும் உணர்வு ரீதியாக இணைந்து வேலை பார்ப்பதால் எப்போது கூடினாலும் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்ததாக இசை ஆல்பம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருக்கிறீர்களாமே?

ஆமாம். அதற்கான வேலைகளில்தான் தற்போது இருக்கிறேன். டொரண்டோவில் இசை நிகழ்ச்சி முடித்துவிட்டு திரும்பியதும் அதற்கான வேலைகளில் முழுக்க இறங்க உள்ளேன்.

உங்களுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தும் அதைத் தவிர்க்க என்ன காரணம்?

நேரம் இல்லை. அதுமட்டும்தான் காரணம். தயாரிப்பில் மட்டும் ஆர்வம் இருக்கிறது. விரைவில் அது தொடர்பாக கவனம் செலுத்தலாம் என்று எண்ணம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்