‘‘தலைவர்களின் பிறந்த நாள், நினைவுநாளில் அவர்கள் தொடர்புடைய அல்லது அந்தந்த கட்சிக்காரர் கள்தான் மரியாதை செலுத்து வார்கள். பசும்பொன் முத்துராம லிங்கத் தேவருக்கு மட்டும்தான் அனைத்து கட்சியினரும் சேர்ந்து மரியாதை செலுத்துவார்கள். அறி வாளி, ஆன்மிகவாதி, தத்துவம், தேசபக்தி, ஆங்கிலப் புலமை என தனித்தன்மை மிகுந்த அவரது வாழ்க்கையை வரலாற்றுத் திரைப் படமாக எடுத்து முடித்திருப்பதில் எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி’’ என்கிறார் சூலூர் கலைப்பித்தன்.
அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை நடக்கவுள்ள நிலையில், அவரது வாழ்க்கையை ‘பசும் பொன் தெய்வம்’ என்ற பெயரில் 2 மணி நேர வரலாற்றுத் திரைப்பட மாக எடுத்து, அதன் இறுதிகட்ட பணி களில் கவனம் செலுத்தி வரு கிறார் எழுத்தாளர், தயாரிப்பா ளர், இயக்குநர் சூலூர் கலைப்பித் தன். படத்துக்கு திரைக்கதை, வச னம், பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். அவருடன் உரை யாடியதில் இருந்து..
தேவர் பற்றிய திரைப்படம் எடுக்க உங்களுக்கு தூண்டுதலாக இருந்தது எது?
உயர் பதவிக்கு ஆசைப்படா மல் நல்லது செய்த குணம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போராட்டத்துக்கு தென் மாவட் டங்களில் இருந்து இளைஞர் களை திரட்டி அனுப்பியது, சாதிக்கு அப்பாற்பட்டு நின்று மக்களுக்காக உழைத்தது, 4,000 நாட்கள் சிறையில் இருந்தது என அடுக்கிக்கொண்டே போகலாம்.
தேவர் குறித்த ஒவ்வொரு நிகழ்வையும், அது நடந்த சரி யான காலகட்டத்தையும், தேதியை யும் பதிவு செய்திருக்கிறோம்.
வரலாற்றுப் படம் என்பதால், பொருளாதார ரீதியான சவால்கள் இருக்குமே?
தேவரின் பெயரை சொல்லி பணம் சம்பாதிக்கும் பல அமைப்பு கள் உதவாதது வருத்தமே. இருந்தாலும் போராடி, உதவி பெற்று படத்தை முடித்திருக் கிறேன். தேவர் ஜெயந்தியன்று (அக்.30) ரிலீஸ் செய்ய முயற்சித்தேன். பின்னணி இசை வேலைகள் பாக்கி இருக்கின்றன. அதை முடித்துக்கொண்டு டிசம் பரில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago