‘‘இனி ஒவ்வொரு படத்துக் கும் எனக்கு நானே பட்டப் பேரு வச்சிக்க லாம்னு இருக்கேன். அந்த வரிசையில் அடுத்து என் இசையமைப்பில் வரவுள்ள ‘ஆர்.கே.நகர்’ படத்தில் ‘இசை சுனாமி’ பிரேம்ஜி என்றும், அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நான் இசையமைத் துள்ள ‘பார்ட்டி’ படத்தில் ‘இசை டக்கீலா’ பிரேம்ஜி என்றும் பட்டம் போட்டுக் கொண்டிருக்கிறேன்’’ - வழக்கம்போல கலகலப்பாக பேசத் தொடங்குகிறார் பிரேம்ஜி அமரன். முழுக்க பிஜி தீவில் படமாக்கப்பட்ட ‘பார்ட்டி’ படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணியில் தீவிரமாக இருந்தவருடன் ஒரு நேர் காணல்..
முதன்முதலாக அண்ணன் வெங்கட்பிரபு படத்துக்கு இசை யமைக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி?
ரெண்டு சிங்கிள்ஸ் வெளி வந்தாச்சு. சூர்யா, கார்த்தி ரெண்டு பேரும் ஒரு பாட்டு பாடியிருக் காங்க. இன்னொரு டூயட் பாட்டை ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பாடி யிருக்காங்க. டி.இமான் ஒரு பாட்டு, அனிருத் ஒரு பாட்டு, எஸ்பிபி அங்கிள், சித்ரா அக்கா ஒரு பாட்டுன்னு மொத்தம் 6 பாட்டு. இந்த படத்துக்கு நான் இசையமைக்க முடிவானதுமே, எல்லா பாட்டை யும் இசையமைப்பாளர்கள், விஐபிக்கள்தான் பாடணும்னு முடிவு பண்ணிட்டோம். அந்த வகையில சிறப்பா வந்திருக்குன்னு நம்புறேன்.
‘பார்ட்டி’ உங்கள் நட்புக் குழுவினர் இடையே நடந்த உண்மைக் கதையா?
டிசம்பர் 31-ம் தேதி இரவு தொடங்கி ஜனவரி 1-ம் தேதி, அதாவது, அடுத்த நாள் காலை முடிகிற கதை. இது புதிய கதை தான். டிசம்பர் 31-ம் தேதி பலரும் பார்ட்டியில் இருப்பார்கள். அந்த சூழலை அண்ணன் அவனது ஸ்டைலில் எடுத்திருக்கான். ‘சரோஜா’ கொஞ்சம், ‘மங் காத்தா’ மிச்சம் என்ற பாணியிலான பட மாக இருக் கும். அதில் ஜாலி, ஆக்சன், திரில் லர், அண்ணன் ஸ்டைல் காமெடி எல்லாம் இருக்கும்.
படத்தில் இளையராஜா ஸ்டைல் பாடல் இருக்காமே?
ஆமாம். கதையில் ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கு. அதுக் காக, 1980-ல் வந்ததுபோன்ற ஒரு பாடலை உருவாக்கினோம். அது பெரியப்பா (இளையராஜா) பாணி பாடலாக இருக்கும். அதைத் தான் எஸ்பிபி அங்கிள், சித்ரா அக்கா பாடியிருக்காங்க. அப்ப டியே பெரியப்பா பாட்டு மாதிரியே போட்டிருக்கோம். அதை எழுதி யது அப்பா கங்கை அமரன்.
இளையராஜா பாடலை சுட்டால் அவருக்கு கோபம் வருமே?
‘பெரியப்பா, உங்க பாடலை திருடி ஒரு பாட்டு போட்டிருக்கேன்’ என்று நானே அவரிடம் சொல்லி யிருக்கேன். ‘நீ மட்டுமா திருடுற! எல்லாரும்தான் திருடுறாங்க’ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னார். மற்ற வர்களின் இசையை அவர் கேட்க மாட்டார். யாராவது போய் அவரிடம் சொன்னால்தான், திருடின விஷயமே அவருக்கு தெரியும். அதனால தப்பிச்சிக்கலாம்.
உங்கள் பாணி காமெடிக்கான இடம்தான் அப்படியே இருக் கிறதே, பிறகு, ஏன் திடீரென இசை மீது காதல்?
நான் நடிக்க வந்ததே சுவாரசிய மான கதை. தெரியாம நடிக்க வந்தேன்னுகூட சொல்லலாம். லண்டன்ல ரெண்டு வருஷம் இசை படிச்சேன். யுவன்சங்கர் ராஜாவின் பல படங்களில் உதவி யாளராக பணியாற்றினேன். ‘‘சென்னை 28’ படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு, நடி’ என்று அண்ணன் சொன்னதால நடிக்க வந்தேன். இப்போ, ‘‘நீ நடிக்க வேண்டாம். இசையமைப்பு வேலையை பாரு’’ன்னு அண்ண னும், யுவனும் சொன்னாங்க. அதனால இந்த வேலையை கவனிக்கிறேன். எப்பவுமே எனக்கு இசை மீதுதான் காதல் அதிகம்.
வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் படத்துக்கும் நீங்கள்தான் இசையாமே?
அது 6 கதைகள் கொண்ட படம். ஒவ்வொரு கதைக்கும் ஒரு ஹீரோ, ஒரு இசையமைப்பாளர். ஒவ்வொரு கதையும் தனித்தனி யாக பயணித்து, கடைசியில் ஓரிடத்தில் சேரும். அந்த 6 கதைகளில் நான் ஒரு கதையில் நடிக்கிறேன். ஒரு கதைக்கு இசையமைக்கிறேன்.
அப்போ.. இனிமே இசைதானா? நடிகனாக பார்க்க முடியாதா?
திட்டம் போட்டு வைத்துக் கொண்டு எதுவும் செய்றதில்லை. கடவுளை ரொம்ப நம்புறவன் நான். அவர் சொல்றதை செய் றோம். நடிப்பு, இசை ரெண்டை யும் இணைந்தே செய்யலாம்னு இருக்கேன். விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் எல்லாம் ரெண்டை யும் ஒண்ணா அழகா செய்றாங் களே. அந்தமாதிரி. நடுவில், ஹீரோவாக செய்யவும் 2 கதை கள் வந்தன. என் டேஸ்ட்டுக்கு சரியாக இருந்தால் கண்டிப்பா நடிப்பேன்.
நடிகர் ஜெய் இரவு நேர ‘பார்ட்டி’க்கு சென்று அடிக்கடி போலீஸிடம் மாட்டிக்கொள்கி றாரே. நீங்கள் நெருங்கிய நண்பர் தானே, அவருக்கு அட்வைஸ் செய்யலாமே?
ஒரு முக்கியமான விஷயம். அவன் மாட்டிக்கும்போதெல்லாம் நானும் கூடவேதான் இருப்பேன். இரவு நேரத்துல வெளியில போய்ட்டு வரும்போது, போலீஸ் நிறுத்தி கேள்வி கேட்கிறது சாதாரணம்தான். எல்லார் வாழ்க்கையிலும் நடக்கத்தான் செய்யுது. ஒரு நடிகர், செலிப்ரிட்டிங்கிறதால, நாங்க செய்யுற ஒவ்வொண்ணும் கவனிக்கப்படுது, பெரிய விஷயமா பார்க்கப்படுது. இதை அப்படித்தான் எடுத்துக்கணும்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago