நகைச்சுவை நடிகர்களுக்கான காலம் மாறிப்போச்சு!: நடிகை வித்யுலேகா ராமன் நேர்காணல்

By மகராசன் மோகன்

தமிழில் கலகலவென காமெடி படங்களில் தொடர்ச்சியாக நடித்துவந்த வித்யுலேகா ராமன், சமீபகாலமாக தெலுங்கில் பிஸியாகிவிட்டார். அவருடன் ஒரு நேர்காணல்..

தமிழ்ப் படங்களில் இப்போதெல்லாம் உங்களை அதிகம் காண முடிவதில்லையே?

இங்கு ஸ்கோப் இல்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. நாகேஷ், சந்திரபாபு, ஆச்சி மனோரமா, காந்திமதி, கோவை சரளா வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் கலக்கிய மண் இது. ஆனால், இப்போது காமெடியன்களை வைத்து இங்கே கதை எழுதுவதே இல்லை. ஹீரோயினுக்கே வேலை இல்லாமல், ஒரு ஹீரோ, ஒரு வில்லன், ஒரு காமெடி நடிகரை வைத்து முடித்துவிடுகின்றனர். அதுவும், காமெடி நடிகர் என்றால் முன்னணியில் உள்ள ஒருசிலரை மட்டும்தான் மனதில் வைத்து கதைஎழுதுறாங்க. தெலுங்கில் அப்படி இல்லை.ஒரு படத்துக்குள் 10 காமெடி கதாபாத்திரங்கள் வைத்து யோசிக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு தெலுங்கில்தான் நிறையஸ்கோப் இருக்கு. இப்போது தமிழில் நகைச்சுவை நடிகர்களுக்கான காலம் மாறிப்போச்சு. கடந்த 2 வருஷமா தெலுங்கு சினிமாவுலதான் எக்கச்சக்கமா வாய்ப்பு குவியுது. நம்ம ஊர் பொண்ணு அந்தமாநில விருதான ‘நந்தி விருது’ வாங்கியிருக்கேன்னா பார்த்துக்கோங்க.

தெலுங்கில் காமெடியை அந்த அளவுக்கு கொண்டாட என்ன காரணம்?

தமிழில் வந்த கடைசி 10 படங்களை எடுத்துப் பார்த்தால், நகைச்சுவைக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. தெலுங்கில் 90 சதவீத படங்களில் நகைச்சுவை ஒரு பகுதியாகவே இடம்பெறும். தெலுங்கில் என்னை மனதில் வைத்து ஒரு கதாபாத்திரம் எழுதுறாங்கன்னு வச்சுப்போம். சந்தர்ப்ப சூழலால் நான் நடிக்க முடியாவிட்டால், வித்யுவுக்கு மாற்று யார்னு யோசிக்க மாட்டாங்க. அந்த கேரக்டரையே தூக்கிடுவாங்க. நடிகர்களுக்கு அங்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம்.

தமிழில் எத்தனை படங்களில் நடிக்கிறீர்கள்?

தம்பி ராமையாவின் மகன் ஹீரோவா நடிக்கும் ‘தண்ணி வண்டி’ படத்தில் நடிச்சிருக்கேன். அடுத்து, தமிழ், தெலுங்குன்னு 2 மொழிகளில் தயாராகும் புதுப்படத்திலும் வர்றேன்.

உங்களை கவர்ந்த நகைச்சுவை நடிகை யார்?

ஆச்சி மனோரமாதான். அவங்கதான் இந்த துறையில் 100 சதவீதம் சாதிச்சதாக நினைக்கிறேன். நகைச்சுவை மட்டுமில்லாம, சீரியஸான குணச்சித்திர நடிகை, அம்மா, அக்கா, பாட்டி என அவங்க தொடாத எல்லையே இல்லை. அதுபோல எல்லா விதமான பாத்திரங்களிலும் நடிச்சு நல்ல சப்போர்ட்டிங் நடிகைன்னு பெயர் வாங்கணும்.

திருமணம் எப்போது?

இப்போதைக்கு தொழிலில்தான் முழு கவனமும் இருக்கு. என் தொழிலை நேசிக்கிற, உறுதுணையா, ஆதரவா இருக்குற ஒருவர் அமையும்போது கண்டிப்பா திருமணம் செய்துப்பேன். அப்பா - அம்மா காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் அதற்கும் தடை இருக்காது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்