பரியேறும் பெருமாளை மக்களிடம் சேர்த்ததுதான் மிகப்பெரிய வெற்றி: கதாநாயகன் ‘பரியனாகவே மாறிய கதிர் நேர்காணல்

By மகராசன் மோகன்

அடுத்து 5 படங்கள் நடித்த பிறகு கிடைக்க வேண்டிய இடத்தை இப்பவே அடைந்த மாதிரி ஓர் உணர்வு. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. எல்லாவற்றையும் வடிகட்டி சரியான படங்களைத் தேர்ந்தெடுக்கணும் என்கிற பொறுப்பை ‘பரியேறும் பெருமாள்' படம் கொடுத்திருக்கு! என்கிறார் கதிர்.

தொடர்ச்சியான பாராட்டுகள், சிறப்பான விமர்சனங்கள் என்று ‘பரியேறும் பெருமாள்' படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள். இத்தகைய வெற்றிப் படத்தில் ‘பரியனாக' வாழ்ந்த நடிகர் கதிருடன் ஓர் உற்சாக உரையாடல்… இது:

படத்தில் நீங்கள் வரும் பெரும்பாலான காட்சிகள் நிறைய அவமானங்களை எதிர்கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறதே?

பரியன் என்ற கதாபாத்திரத்தின் டிசைன் அது. படத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வு களுக்குப் பின்னாலும் ஒரு நிஜ சம்பவம் இருக்கு. படம் பார்க்கும் மக்கள் ‘ஆமாம்.. இப்படித்தானே நடக்கிறது!’ என்று நம்பி ஏற்றுக்கொள்ளணும்னா காட்சிகளில் உண் மைத் தன்மையை 100 சதவீதம் பொருத்த வெண்டும். அதைத்தான் ‘பரியேறும் பெரு மாள்' திரைக்களத்தில் இயக்குநர் மாரி செல்வ ராஜ் அற்புதமாக கையாண்டிருக்கிறார். அப்படி அமைந்த ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து நடிப்பதுதானே ஒரு நடிகனோட வேலை. அதைத்தான் நான் செய்தேன்.

தமிழகத்தின் சில இடங்களில் இந்தப் படம் வெளியாவது உள்ளிட்ட விஷயங்களில் நிறைய தடைகள் இருப்பதாகச் சொன்னார்கள். அதையும் மீறி படம் எல்லோரையும் பேச வைத்துவிட்டதே..?

ஒரு நடிகனாக இந்த 4 ஆண்டுகாலத்தில் வித்தியாசமான நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து நாம் நடித்த ஒரு படம் நல்லா இருக்கு என்பதையும் கடந்து, அந்தப் படத்தை பெருவாரியான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பது மிகப்பெரிய வேலை. அந்த வேலைதான் படத்தோட வெற்றியை தீர்மானிக்கும். அந்த வகையில ‘பரியேறும் பெருமாள்' படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான வலிமையான கதைக்களமும் கதைக்கருவும் எங்களிடம் இருந்தது. அதை மக்களும் சரியாக ஏற்றுக்கொண்டார்கள்.

‘செக்கச் சிவந்த வானம்' மாதிரி பெரிய நட்சத்திரங்களின் படத்தின் ரிலீஸோடு இந்தப்படமும் வரும்போது எப்படி இருந்தது?

என்னோட ‘கிருமி' படம் ரிலீஸானபோதும் இந்த மாதிரி சில சிக்கல் இருந்தது. பலரும் பைரசி மூலம் படம் பார்த்துட்டு, ‘நல்லா இருக்கு கதிர்'னு சொன்னாங்க. மனசு எப்படி இருந்திருக்கும் பாருங்க. இந்தமுறை என்ன நடந்தாலும் இந்த பரியேறும் பெருமாளை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்கிறதுல தெளிவாக இருந்தோம். அது இப்போ நடந்தது. பெரிய படங்கள் வரும்போது சின்னச்சின்ன படங்கள் ஒரு இடத்தைப் பிடிப்பது என்பது கஷ்டம்தான். அதையும் கடந்து இன்று பெயர் எடுத்திருக்கிறோம். மக்களுக்கு நன்றி.

‘மதயானைக் கூட்டம்' ரிலீஸ் சமயத்தில், இந்தப் படத்தின் வெற்றிதான் தொடர்ந்து நான் நடிக்கலாமா என்பதை தீர்மானிக்கும் என்று கூறியிருந்தீர்கள். இப்போது அந்த மனநிலை மாறிவிட்டதுதானே?

முதல் படத்தில் நடிக்க வந்தபோது, அந்தப் படம் வெற்றி அடைந்தால் தொடர்ந்து நடிக் கலாம். இல்லையென்றால் மேற்கொண்டு யோசிக்கலாம் என்ற மனநிலையில்தான் இருந்தேன். அது இயக்குநர் படம். அவர் என்ன சொன்னாரோ அதைச் செய்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத் தடுத்து ஆர்வம் துளிர்த்தது. இனிமேல் நான் நடித்த படத்தைப் பார்க்க வருபவர்கள் திருப்தி அடையும் வகையில் கதை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி தான் கதைகள் கேட்டு நடித்து வருகிறேன்.

அடுத்தடுத்து ‘சிகை', ‘சத்ரு' என வரிசையாக உங்கள் படங்கள் வெளியாக இருக்கின்றதே?

‘சர்கார்' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு தியேட் டர் விஷயங்கள் பேசிவிட்டு நவம்பர் மாதத் தில் ‘சிகை' திரைப்படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டிருக்கிறோம். ஆண், பெண் என இரு கெட்டப் ஏற்று நடித்துள்ள திரில்லர் வகைப் படம்தான் சிகை. அதே மாதிரி ‘சத்ரு' ஒரு வகையான குடும்பப் பின்னணி திரில்லர் களம். அதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். ஆனால் போலீஸ் படம் அல்ல. இந்த இரண்டு படங்களையுமே பார்க்க வரும்போது ‘பரியேறும் பெருமாள்' படத்துக்கு வந்த எதிர்பார்ப்போடு வரக்கூடாது. இரண்டுமே இரு வேறு களம். அடுத்து, இப்போது இயக்குநர் குமரன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். விரைவில் சிறப்பான அறிவிப்பு ஒன்றும் வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்