யானைகளை பாதுகாக்கும் வரைதான் காடுகள் இருக்கும்: ‘மரகதக்காடு’ இயக்குநர் மங்களேஸ்வரன் நேர்காணல் 

By மகராசன் மோகன்

காடுகளைப் பாதுகாக்க போராடும் மக்களுக்கும், அதில் உள்ள கனிம வளத்தை சூறையாட நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இடையே நடக்கும் யுத்தமே இந்தக் கதைக் களம். அதை இன்றைக்கு காட்டில் வசிக்கும் பழங்குடி மக்கள் நேரடி யாகவே எதிர்கொள்கிறார்கள் என்கிற ‘மரகதக்காடு’ படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் நம்மிடம் பகிர்ந்ததாவது:

இங்கே பல இயக்குநர்கள் காடு களைப் பின்னணியாக வைத்து படம் எடுத்துள்ளனர். இந்தப் படம் வழியே என்ன சொல்ல வருகிறீர்கள்?

எல்லோரும் வனத்துக்குள் பிரதான காட்சியை வைத்து பட மாக்கியிருப்பார்கள். நாங்கள் வனத் துக்குள் உள்ள பிரச்சினையை மையமாக வைத்து படம் எடுத்திருக் கிறோம். காட்டை வளர்க்கிறோம் என்கிற பெயரில் அதை சூறையாடு வதற்கான காரணங்கள் சார்ந்துள்ள பிரச்சினையை இப்படம் பேசும். 1980-களில் இந்தியா முழுக்க வனத் தில் வசிக்கும் பழங்குடி மக்கள் ‘சிப்கோ மூவ்மென்ட்’ என்கிற பெயரில் எதிர்கொண்ட பிரச்சி னையை வைத்து இந்தக் கதை உரு வானது. ‘காணி’ இன மக்களின் பின்னணியில் படம் நகரும். எமரால்டு எனும் மரகதத்தைத் தேடி அதிகாரம் படைத்தவர்கள் படை எடுப்பதற்கும், அதை எதிர்த்து வன வாசிகள் போராட்டம் நடத்துவதற் கும் இடையே நடக்கும் களம் இது.

இந்த மாதிரியான கதைக் களத் துக்கு முன்னணி நடிகர்கள் பெரிய பலமாக இருப்பார்கள். நீங்கள் புதியவர்களைத் தேடி போனது ஏன்?

கதை சுமக்கும் வாழ்வியல்தான் காரணம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கும்போது அதில் ஸ்டார் மதிப்பு இருந்தால் சமயத்தில் எடுபடாமல் போகும். முன்னணி நடிகர்களுக்கு தகுந்த மாதிரி கதையை மாற்ற வேண்டும். அது இங்கே அவசியம் இல்லாததால் புதியவர்களைக் கொண்டு படமாக் கினேன். அஜய், ராஞ்சனா, ஜெய உள்ளிட்ட நடிப்புக் குழுவினரும், ஒளிப்பதிவாளர் நட்சத்ர பிரகாஷ், இசை ஜெய் ப்ரகாஷ், கலை இயக்குநர் மாடின் டைடஸ், எடிட்டர் சாபு ஜோசப் உள்ளிட்ட டெக்னிக்கல் குழுவினர் பங்களிப்பும் இந்தப் படத்துக்கு பெரிய பலம்.

படத்தில் யானை ஒரு குறியீடு மாதிரி தெரிகிறதே?

காடு என்பது தனி உலகம். அங்கே வாழும் யானைகளை பாதுகாக்கும் வரைக்கும்தான் காடுகள் இருக்கும். ஊருக்குள் யானை வருகிறது என்று சொல் கிறோம். ஆனால், நிஜத்தில் நாம் தான் அதன் இருப்பிடம் நோக்கிப் போகிறோம். படம் முழுக்க பாப நாசம், முண்டந்துறை ஆகிய பகுதிகளில்தான் படமாக்கினோம். இதுவரை யாரும் படமாக்கப்படாத பகுதிகள் அவை. அங்கேயெல்லாம் படப்பிடிப்பு நடத்த அரசாங்கத்திடம் முறையே பர்மிஷன் பெறவே ஆறேழு மாதங்கள் ஆகின. 10 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை பணம் கொடுத்து வாங்கினோம் என்றால் வாய்விட்டுச் சிரிப்போம். இப்போது கிராமங்களில்கூட அது வழக்கமாகிவிட்டது. அதை மக் களும் பெரிதாக எடுத்துக்கொள் வதில்லை. நாளை காற்றுக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என்று பயம் தொற்றுகிறது. அது நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் காடு கள் பாதுகாக்க வேண்டும். அதைத்தான் இந்தப் படம் சொல்கிறது.

இந்த மாதிரி விஷயங்களைத் தொடும்போது அது விழிப்புணர்வு களமாகிவிடுமே?

மூன்று விஷயங்கள் ஒரே இடத்தில் சங்கமிப்பது போல இப் படத்தில் நான் தொட்டிருக்கிறேன். காடுகள் பாதுகாக்கப்பட வேண் டும், கனிம வளங்களை அதிகாரம் படைத்தவர்கள் சூறையாடக் கூடாது. மலைவாழ் மக்களுக் கென்று ஒரு நம்பிக்கை இருக் கிறது. அது எந்தவகையிலும் சிதைக்கப்படக் கூடாது. இந்த விஷயங்களை கமர்ஷியல் பின் னணியில் தொட்டிருப்பதால், இந்தப் படம் நேரடியாக வாழ்வியல் களத்துக்குள் பயணிப்பது போன் றிருக்கும். இந்த மாதிரி உண்மை சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு ஒரு படம் உருவாக்கப் படும்போது அதை வணிகரீதியாக கொண்டு செல்வதில் நிறைய சவால்கள் உள்ளன. அதையெல் லாம் எதிர்கொண்டுதான் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வேலையில் முழுவீச்சில் நாங்கள் இறங்கியுள்ளோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்