தமிழ் சினிமாவில் இது புதிய இயக்கு நர்களின் காலம். அடுக்கடுக்காக பல இளம் இயக்குநர்கள் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி வெற்றிக்கொடியை பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கிறார் இயக்குநர் சரவணராஜன். இயக்குநர் வெங்கட் பிரபுவின் பட்டறையிலிருந்து வந்திருக்கும் இவர், ‘வடகறி’ படத்தை இயக்கி வருகிறார்.
“ரசிகர்களை உற்சாகப்படுத்த பல விஷ யங்களை என் படத்தில் கொடுத்திருக்கிறேன். நம்ம வாழ்க்கைல நடந்த விஷயத்தையே, ஸ்கிரீன்ல சந்தோஷமாய் பாக்குற மாதிரி என் படம் அமைஞ்சிருக்கும்” என்று வடகறியை பற்றி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் சரவணராஜன். அவரிடம் பேசியதிலிருந்து:
காலைல இட்லி, தோசைக்கு தொட்டுக்கிற ‘வடகறி’யை படத்துக்கு தலைப்பா வச்சிருக்கிறீங்களே?
லோக்கல் பையன் ஒருத்தன் நல்ல போன் வாங்கணும்கிறதுக்காக என்ன பண்றான்கிறது தான் படம். இதுக்காக அவன் எதிர்கொள்கிற பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதையும் சொல்லியிருக்கோம்.
போன் சம்பந்தப்பட்ட கதைக்கு எதுக்கு தலைப்பு ‘வடகறி'னு வச்சுருக்கீங்க?
‘வடகறி’ங்கிறது படத்தில ஒரு சின்ன விஷயம்தான். படம் பார்த்தா தெரிஞ்சுக் குவீங்க. படத்தோட ஓப்பனிங்ல ஏன் ‘வடகறி' தலைப்புனு சொல்லியிருக்கேன். தலைப்பு ‘வடகறி'னு பிக்ஸ் ஆன உடனே நிறைய லோகோ டிசைன் பண்ணினோம். எதுவுமே செட் ஆகல. கடைசில, அந்த காலத்துல எல்லாம் ஹோட்டல்கள்ல சிலேட்லதான் எழுதி தொங்க விட்டிருப்பாங்க. டிசைன் டிசைனா சிலேட்டுகளும் இருக்கும். அதே மாதிரி பண்ணலாம்னு ரெடி பண்ண டிசைன் தான் ‘வடகறி' லோகோ.
ஜெய் ஷுட்டிங்கிற்கு சரியா வர மாட்டார். படம் லேட்டாகும்னு நிறைய சொல் றாங்களே. உங்க படத்துல ஜெய் எப்படி?
என்னைப் பொறுத்தவரைக்கு ஜெய் இந்தப் படத்திற்கு கிடைச்சது பெரிய கிப்ட். அவர் அவ்வளவு உதவிகள் பண்ணியிருக்கார். சூப்பரா நடிச்சிருக்கார், இந்த கதையை சொன்ன உடனே, அடுத்த 10 நிமிஷத்துல சைன் பண்ணிட்டார். ‘என்னோட வாழ்க் கைல முதல் முறையா இவ்வளவு சீக்கிரமா சைன் பண்ணின படம் இதுதான். எனக்கு அந்தளவிற்கு கதை மேல நம்பிக்கை யிருக்கு’னு சொன்னார். இவ்வளவு சீக்கிரம் ‘வடகறி’ ரெடியானதுக்கு காரணம் ஜெய் தான்.
ஜெய், சுவாதி எல்லாம் விட்டுட்டு ‘வடகறி’ன்னாலே ‘சன்னி லியோன்' ஆடியி ருக்கிற படம்னுதானே சொல்றாங்க?
அவங்க இந்தப் படத்துல ஹீரோவோட ஒரு ட்ரீம் சாங்ல ஆடறாங்க. ட்ரீம் சாங்னதும் நாங்க நிறைய பேரை யோசிச்சோம். பசங்ககிட்ட இதைப் பத்தி உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி னப்போ அவங்க கொடுத்த ஐடியாதான் சன்னி லியோன். பயங்கர பீக் அவங்க, சூப் பரா இருக்கும்னு சொன்னாங்க. உடனே பேசினோம்.
தென்னிந்திய மொழி படங்கள்ல நடிக்க ணும்னு அவங்களுக்கு ஆசையிருந்தது. அந்த நேரத்துல நாங்களும் பேசினோம். முதல்ல அவங்க ரொம்ப பயந்தாங்க. உடனே நான் எந்த இடத்துல பாடல் வருது, எந்த மாதிரி காஸ்ட்யூம் இப்படி எல்லாமே சொல்லிதான் சம்மதிக்க வைச்சோம். இந்தி படங்கள்ல வர்ற சன்னி லியோனை ‘வடகறி’ல பார்க்க முடியாது. நம்ம கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி டிரெஸ் பண்ணித்தான் நடனமாடி இருக்காங்க. படம் பார்த்தாலே தெரியும்.
வெங்கட் பிரபுகிட்ட நீங்க கத்துக் கிட்டது என்ன?
படத்துக்கு டயலாக் எழுதுற விஷயங்கள் எல்லாமே அவர்கிட்ட இருந்துதான் கத்துக் கிட்டேன். ஒரு சீன் கொடுத்து டயலாக் எழுதச் சொல்வார். எழுதி கொண்டு போய் காட்டின உடனே “நல்லாயிருக்கு. ஆனா.. இப்படி மாத்தினா நல்லாயிருக்கும்ல”னு சொல்வார். நார்மலா பசங்க எப்படி பேசிப்பாங்கனு நினைச்சு டயலாக் எழுதுன்னு சொல்வார். அவர் ஸ்பாட்ல வந்து சீன் கிரியேட் பண்ணுவார்னு நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனா, அவர் எவ்வளவு ஹோம் வொர்க் பண்றார்னு எனக்கு தெரியும். ஒரு சீனை எடுக்கப் போறார்்னா, அது நல்லா வர்ற வரைக்கும் யோசிச்சுக்கிட்டே இருப் பார். நடிகர்கள்கிட்ட அவர் பழகுற விதம், இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
வெங்கட்பிரபுகிட்ட நீங்க ஒரு நடன இயக்குநராதான் போய், அப்பறம் உதவி இயக்குநரா சேர்ந்தீங்களாமே?
ஆமா. ‘கோவா’ படத்துல நிறைய சீன் கள்ல க்ளப் டான்ஸ் பின்னாடி போய்கிட்டு இருக்கும். 35 நாட்கள் அவரு கூடவே இருந் தேன். அப்படியே, அவரு கூட சேர்ந்துட்டேன்.
நீங்க ஒரு நடன இயக்குநர், திடீர்னு ஏன் இயக்குநர் ஆசை?
எனக்கு இயக்குநராகணும்னு ரொம்ப நாள் ஆசை. என் அண்ணன் கண்மணி, எடிட்டர் லெனின்கிட்ட வேலை பார்த்தார். அப்போ நிறைய விஷயங்கள் சொல்லுவார். அதே மாதிரி எங்கண்ணனும் சேரனும் ஒரே இடத்துல இருந்தாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து படத்தைப் பற்றி நிறைய டிஸ்கஸ் பண்ணு வாங்க. அப்போ எல்லாம் நான் போய் உட் கார்ந்து இருப்பேன். எனக்கு எங்கண்ணன் தான் ரோல் மாடல். கதைல காம்ப்ரமைஸ் ஆகவே மாட்டார். இயக்குநரா ஆவதற்கு நடனம் உதவியா இருந்துச்சு அவ்வளவு தான்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago