ரமேஷ் விநாயகத்தின் இசை மாலை: 11 பாடகர்கள் 12 பாடல்கள்

By யுகன்

பாபநாசம் சிவனின் மகள் ருக்மிணி ரமணியிடம் முறையாக கர் னாடக இசையையும் ஜேகப் ஜானிடம் மேற்கத்திய இசையையும் பயின்றவர் ரமேஷ் விநாயகம். திரைப்படத் துறையிலும் சிறிது காலம் இசையமைத்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை சர் முக்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கத்தில் ‘கிளாஸ் ஆஃப் கிளாஸ்’ எனும் நமது பாரம்பரிய ராகங்களின் பெருமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 12 பாடல்களை அருணா சாய்ராம், ஸ்ரீராம் பரசுராம் - அனுராதா ஸ்ரீராம், திருச்சூர் சகோதரர்கள், உன்னி கிருஷ்ணன், காயத்ரி வெங்கட்ராகவன், அபிஷேக் ரகுராம் உள்ளிட்ட 11 பாடகர்கள் பாடினர்.

ஒவ்வொரு பாடகரின் திறமையையும் வெளிக்கொண்டு வரும் வகையில் சாகித்யமும் இசை அமைப்பும் இருந்ததில் வாக்கேயகாரரான ரமேஷ் விநாயகத்தின் நுட்பமான இசையின் மேன்மை வெளிப்பட்டது. இதில் இரண்டு பாடல்களை அவருடைய தந்தை எழுதியிருந்தார். அதில் ஒரு சமஸ்கிருதப் பாடலுக்கு பிரதித்வனி எனும் ராகத்தில் இசை அமைத்திருந்தார் ரமேஷ் விநாயகம். சிறுவயதில் இவரால் உருவாக்கப்பட்ட ராகத்துக்கு இந்தப் பெயரைச் சூட்டியவர் இசை மேதை டாக்டர் எஸ்.ராமநாதன்.

நிரோஷா, ஸ்ரீரஞ்சனி, முகாரி, பூர்வி கல்யாணி, நாட்ட குறிஞ்சி, மாயாமாளவ கவுளை, கனகாங்கி ஆகிய ராகங்களில் சாகித்யங்களை அமைத்திருந்தார் ரமேஷ் விநாயகம். படைப்பை கொடுத்த தோடு ஒதுங்கி இருந்து, பாடகர்கள் தங்களின் கற்பனைக்கு ஏற்றபடி அதைப் பாடுவதற்கேற்ற சுதந்திரமும் நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அபிஷேக் ரகுராம் பாடிய ‘சரவணபவ குகா…. குக சரவண பவ’ பாடல், மெதுவாக படிக்கட்டில் ஏறி சறுக்கு மரத்தில் சர்ரென்று பாய்ந்து இறங்கும் குதூகலத்தைத் தந்தது.

ரமேஷ் விநாயகம், “நம்முடைய இசை மும்மூர்த்திகள் வாழ்ந்த காலத்திலேயே மேற்குலகில் வாழ்ந்த இசை மேதையான பீத்தோவன் தஞ்சாவூரில் பிறந்து, இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையோடு இதற்கு இசையமைத்தேன். இந்த ராகத்தை ‘பீதோவனப்ரியா’ என்றுகூட வைத்துக் கொள்ளலாம்” என்றார் நகைச்சுவையாக. அந்தப் பாடல் ரசிகர் களுக்கு புதிய அனுபவத்தைத் தந் திருக்கும்.

முத்திரை பதித்த பல பாடகர்களின் கூட்டணியோடு வீணை கண்ணன், கோட்டு வாத்தியம் ஆலம் துர்கா பிரசாத், மாண்டலின், நாதஸ்வரம் போன்ற வாத்தியங்களும் சங்கமித்த அற்புதமான இசை மாலையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்