‘நான் ஹிட்ச்காக் ரசிகன்’-‘நரகாசூரன்’ இயக்குநர் கார்த்திக் நரேன்

By மகராசன் மோகன்

‘துருவங்கள் 16’ திரைப்படம் கொடுத்த வரவேற்பை யோசித்துக்கொண்டே இருந்தால், அது தேவையில்லாத அழுத்தம் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனாலயே அந்த எண்ணம் துளியும் இல்லாமல் திரும்பவும் ‘இதுவும் முதல் படம்தான்’ என்ற மனநிலையில் உருவாக்கப்பட்ட படமே  ‘நரகாசூரன்’.

 ‘ஒரு கமர்ஷியல் படத்தோட வெற்றி எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்து’ என இயக்குநர் பாலுமகேந்திரா சொன்னதாக வெற்றிமாறன் சார் என்னிடம் ஒரு முறை சொன்னார். என்னதான் நாம் பல கட்ட ஆய்வுக்கு உட்பட்டு படம் செய்தாலும் அதன் முடிவு படம் பார்க்க வரும் ரசிகர்களின் கையில்தான் இருக்கு’’  அனுபவம் குவிந்த தன்னம்பிக்கை மனிதராக பேசுகிறார், இயக்குநர் கார்த்திக் நரேன்.

அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கூட்டணியில் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் சிக்கல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஒருவழியாக பிரச்சினைகள் எல்லாம்  தீர்ந்து, ரிலாக்ஸ் மனநிலையில் இருந்த இயக்குநர் கார்த்திக் நரேனுடன் நடந்த உரையாடல் இது..

இதுவும் ‘துருவங்கள் 16’ படம்  பாணியிலான திரில்லர் படம் மாதிரி தெரிகிறதே?

ஒரு படைப்பாளிக்கு முதல் படம் எப்படி கொடுக்கிறோம் என்பது முக்கியம். அதில் இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது. அடுத்தடுத்த படங்களில் என்ன சொல்ல வருகிறோம், அது எதை நோக்கியது என்பது பயணமாகவே போகும். ‘துருவங்கள் 16’ திரைப்படம் விசாரணை சார்ந்த திரில்லர் படம். இதுவோ சஸ்பென்ஸ் கலந்த டிராமா திரில்லர் வகைப் படம்.  இரண்டும் வெவ்வேறு கதைக் களம்.  விஷூவல் கிசிச்சையே  வேறு வேறு கோணத்தில் இருக்கும்.  கதையில் நிறைய லேயர் இருக்கு. படத்தோட கதையை சொல்லிட்டா உள்ளடக்கம் உடைந்துவிடும்.

கதைக் களம் இம்முறையும் மலைப் பின்னணியாக உள்ளதே, ஏன்?

ஆமாம். ஊட்டிதான் களம்.  41 நாட்கள் அங்கேயே வளர்ந்த படம்.  அடிப்படையில் ஊட்டி ரொமாண்டிக் பிளேஸ் என ஒரு பார்வை இருக்கிறது.  அது வெளியே இருந்து சுற்றுலா செல்பவர்களுக்கு மட்டும்தான் அப்படித் தோணும். அங்கே உள்ள ஊர்வாசிகளோட பார்வை வேறொரு கோணத்தில் இருக்கும். என்னோட பெரியம்மா வீடு அங்கே உள்ளது. சின்ன வயதில் இருந்தே அங்கு அடிக்கடி போய் வருபவன் நான். அவங்க வீட்டுக்கு அருகே ஒரு கிரவுண்ட் இருக்கு. அங்கே போனாக் கூட ஒரு கதை சொல்வாங்க. அந்த மாதிரியான அனுபவங்கள்தான் இந்தக் கதைக் களம் உருவாகக் காரணம்.

அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் உள்ளிட்ட கூட்டணி எப்படி ஒன்றுசேர்ந்தது?

‘துருவங்கள் 16’ படம் முடிந்ததும், வேறொரு கோணத்தில் யோசிக்கலாமேன்னு அரவிந்த் சாமி சாரோட அமர்ந்தேன். சந்தீப் நடித்த  ‘மாநகரம்’ படம் பார்த்துட்டு அவரோட கதாபாத்திர பிரதிபலிப்பு ரொம்ப ஈர்த்தது. என்னோட கதை இலாகா பிரிவில் இருப்பவர்களும் அவரைப் பற்றி நல்ல புரிதல் வைத்திருந்தார்கள். ஸ்ரேயா என்றதும் கிளாமர் அடையாளம் நமக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் நாங்கள் அப்படி யோசிக்கவே இல்லை. அரவிந்த் சாமிக்கு ஜோடியாக  அவருடன் இதுவரை நடிக்காத ஒரு புதியவர் வேண்டும் என்ற மனநிலையில்  ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தோம். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்து நிற்கும். போகஸ் தெரியும்.  இந்தக் கதைக்கு   ‘நரகாசூரன்’ என்ற தலைப்பு எதற்கு என்பதற்கான விடையே கிளைமாக்ஸ் காட்சியில்தான் புரியும்.

மீண்டும் மீண்டும் திரில்லர் படங்கள்தான் உங்களிடம் இருந்து வெளிவருமா?

அப்படியில்லை.  ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக் படங்களை  நான் அதிகம் விரும்பி பார்ப்பவன்.  அவரோட, ‘தி ப்ளஸெர் கார்டன்’ தொடங்கி கடைசி படமான ‘ஃபேமிலி ப்ளாட்’ படம் வரைக்கும் திரில்லர் வகையாகவே  இருக்கும். அது என்னை வெகுவாக ஈர்க்கும். அந்த மாதிரி என்னோட எல்லா ஜானர் படங்களிலும் கொஞ்சம் திரில்லர் இருக்கணும்னு விரும்புகிறேன்.  அவரோட பாதிப்புதான்  அப்படி அமையக் காரணம்.

‘நரகாசூரன்’ படத் தயாரிப்பின்போது  இயக்குநர் கவுதம் மேனனுடன் ஏற்பட்ட சலசலப்பு, பிரச்சினை, ரிலீஸ் நெருக்கடி எல்லாவற்றுக்கும் முடிவு கிடைத்துவிட்டதா?

படம் தயாரிப்பு பணிகள் நடக்கும்போது எந்தப் பிரச்சினையுமே இல்லை. படப்பிடிப்பில் எங்களுக்கு என்ன தேவையோ அது எல்லாமே கிடைத்தது. நடிகர், நடிகைகள்  எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் பிறகு ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள்தான் கவலைப்பட வைத்தன.  அது சார்ந்த பேச்சு வார்த்தை கள் நடக்கும்போது திரும்பவும் அது பற்றிப் பேச வேண்டாம். தற்போது படம் ரிலீஸ் ஆகப் போகிறது, அது முடிந்ததும் அடுத்தப்பட வேலைகள் என அதில்தான் முழு கவனமும் செலுத்தி வருகிறேன்.கார்த்திக் நரேன், அரவிந்த் சாமி’நரகாசூரன்’ படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்