தமிழக வரலாற்றில் கருணாநிதிக்கான இடம் தனித்துவமானது: கவுதமி புகழாஞ்சலி

By ஸ்கிரீனன்

தமிழக வரலாற்றில் கருணாநிதிக்கான இடம் தனித்துவமானது என்று கவுதமி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து நடிகை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞரின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளேன். தமிழக வரலாற்றில் அவருக்கான இடம் தனித்துவமானது. எண்ணற்றவர்கள் சினிமா மற்றும் அரசியலில் செயல்பட அவரை ஒரு உந்துதலாகக் கொண்டுள்ளார்கள். அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்ட்டும்” என்று கவுதமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்