‘ஹீரோயின் குட்டியா ட்ரெஸ் போட்டிருந்தாத்தானே படம் பார்க்க வருவார்கள்?’ என ஒருவர் கேட்டிருந்தார். எனக்குப் பயங்கர காண்டாக இருந்தது என்று நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.
‘குயின்’ இந்திப் படத்தின் மலையாள ரீமேக்கான ‘ஜம் ஜம்’, கவுதம் கார்த்திக் ஜோடியாக முத்தையா இயக்கத்தில் ‘தேவராட்டம்’ என பிஸியாக இருக்கிறார் மஞ்சிமா மோகன். அவரிடம் சில பர்சனல் விஷயங்கள் குறித்துக் கேட்டேன்...
சென்னையிலேயே மஞ்சிமாவுக்குப் பிடித்த இடம் எது?
சத்யம் தியேட்டர். அது என்னவென்றே தெரியவில்லை, அங்கு படம் பார்ப்பதே தனி சுகம்தான். அப்புறம், அங்கு கிடைக்கும் பாப்கார்ன் மற்றும் கோல்டு காஃபி. டிக்கெட் புக் பண்ணும்போதே பாப்கார்னும் சேர்த்து புக் பண்ணிடுவேன். சத்யம் தியேட்டர் தவிர்த்து, சாந்தோம் சர்ச்சுக்கு அடிக்கடி போவேன். என் மனதுக்கு நெருக்கமான இடம் அது.
சமூக வலைதளங்களில் கேட்கப்பட்ட கேள்விகளில், உங்களை அதிகம் எரிச்சல்படுத்திய கேள்வி எது?
‘ஹீரோயின் குட்டியா ட்ரெஸ் போட்டிருந்தாத்தானே படம் பார்க்க வருவார்கள்?’ என ஒருவர் கேட்டிருந்தார். எனக்குப் பயங்கர காண்டாக இருந்தது. கதை நன்றாக இருக்கும் அல்லது தனக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின் நடித்திருக்கிறார்கள் அல்லது பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்றுதான் மக்கள் தியேட்டருக்குப் படம் பார்க்க வருவார்கள். ஆனால், அவர் அப்படிச் சொன்னதும் கோபம் வந்து பயங்கரமாகத் திட்டிவிட்டேன்.
நடிக்க வரவில்லை என்றால் டிசைனர் ஆகியிருப்பேன் என்று ஏற்கெனவே கூறினீர்கள். இப்போதும் அந்த ஆசை இருக்கிறதா?
நான் ஒன்பது, பத்தாவது படிக்கும்போது தான் ஃபேஷன் டிசைனர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. பத்தாவது முடித்ததும் கோடை விடுமுறையில் இரண்டு மாதங்கள் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படித்தேன். ‘இது நம்ம ஏரியா கிடையாது’ என அப்போதே தெரிந்துவிட்டது. அதனால், அந்த ஆசையை அப்போதே மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.
ஸ்டெல்லா மேரிஸ் மாணவியாகப் பார்த்த சென்னைக்கும், நடிகையாகப் பார்க்கும் சென்னைக்கும் என்ன வித்தியாசம்?
காலேஜ் வாழ்க்கை என்றாலே வித்தியாசமாக இருக்கும். அப்போதெல்லாம் நான் பஸ், ஆட்டோவில் போவேன். இப்போது அப்படி முடியாது. ஓரிடத்தில் 10 பேர் இருந்தால், குறைந்தது 3 பேருக்காவது என்னைத் தெரிந்திருக்கிறது. பொதுவாகவே நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்ட பெண். சாப்பிடும்போது யாராவது பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிந்தால் கூட, எவ்வளவு பசியாக இருந்தாலும் அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிடுவேன். அப்படியிருக்கும்போது என்னால் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியவில்லை. ஆனால், அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால், சென்னையின் எம்டிசி பஸ்ஸில் சுற்ற வேண்டும் என ஆசையாக இருக்கிறது.
ஷூட்டிங் இல்லாதபோது உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
நன்றாகத் தூங்குவேன். சில நேரங்களில் ஒரு நாள் முழுவதும் கூட தூங்குவேன். பிறகு, ஏதாவது படம் பார்ப்பேன், மியூஸிக் கேட்பேன். இப்போது யோகா செய்ய ஆரம்பித்திருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்க அது உதவி செய்கிறது. முட்டை அவிப்பது, சிக்கன் கறி செய்வது என கொஞ்சம் சமைக்கவும் தெரியும். இன்னொரு விஷயம் சொன்னால் நீங்கள் சிரிக்கக் கூடாது, பாத்திரம் துலக்குவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நடிகர் ரிஷியும் நீங்களும் காதலிப்பதாக செய்திகள் வெளியானதே...
ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன். நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள்.
ரம்யா நம்பீசன், லட்சுமி மேனனைப் போல் பாடகியாகவும் உங்களை எதிர்பார்க்கலாமா?
எனக்கு அந்த மாதிரி ஆசையும் இல்லை, அதற்கானத் தகுதியும் இல்லை. ‘இப்போதுதான் ஆட்டோ ட்யூன் வந்துவிட்டதே... நீங்கள் ஈஸியாகப் பாடலாமே?’ என்று சிலர் கேட்டார்கள். எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நான் எப்போதுமே செய்ய மாட்டேன்.
நீங்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் எது?
சமீபமாக நயன்தாராவின் ‘எனக்கு இப்போ கல்யாண வயசு வந்துடுச்சுடி’ பாடலை அதிகமாக முணுமுணுக்கிறேன்.
உங்களுக்கு எப்போது கல்யாண வயசு?
ஹா... ஹா... இப்போதைக்கு நிச்சயமாகக் கிடையாது. குறைந்தது ஏழெட்டு வருடங்களாவது ஆகும். அதுவும் காதல் கல்யாணமாகத்தான் இருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago