எங்களுக்குள் போட்டியே இல்லை: ‘சூப்பர் சிங்கர் - 6’ போட்டியாளர்களுடன் ஜாலி நேர்காணல்

By மகராசன் மோகன்

விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் 6’ இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஸ்ரீகாந்த், ரக்சிதா, சக்தி,அனிருத், செந்தில் கணேஷ், மாளவிகா ஆகிய 6 போட்டியாளர்களும் பரபரப்பாக பயிற்சி செய்துகொண்டு இருப்பார்கள் என்று நினைத்தால், ஒன்றாக அமர்ந்து ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர். அந்த ஜாலி அரட்டைக்கு நடுவே அவர்களுடன் ஒரு நேர்காணல்..

“என் கொள்ளுத் தாத்தா.. மைசூர் மகாராஜா. (அப்படியா!) மகாராஜா இல்லைங்க.. அவரோட அரண்மனையில வயலின் வாசிப்பவராக இருந்தார். எனவே, இசை என்பது என் ரத்தத்திலேயே கலந்து இருக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் பாட வேண்டும் என்பது என்னைப் போல நிறைய பேரின் கனவு. என் கனவு நிறைவேறப் போகிறது, இத்தனை பேர் முன்னால் பாடப் போகிறேன் என்ற நினைப்பே பெரிய சந்தோஷமாக இருக்கிறது. நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளேன் என்றாலும், இதுதான் லைவ்வாக நான் பாடப்போகும் முதல் மேடை. எனவே, ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்” என்கிறார் அனிருத்.

அவரைத் தொடர்ந்த ஸ்ரீகாந்த், “6 இறுதிப் போட்டியாளர்களில், முதல் போட்டியாளராகத் தேர்வானதே எனக்குப் பெரிய மகிழ்ச்சி.

அதுமட்டுமல்ல, முதல் சுற்றுக்குத் தகுதியான 22 போட்டியாளர்களில், முதல் பெர்ஃபாமன்ஸ் என்னுடையதுதான். இந்த ‘சூப்பர் சிங்கர் 6’ பயணம், எனக்கு மேஜிக்கலாக இருந்தது. நடுவர்கள், போட்டியாளர்கள் என தனித்தனியாக இல்லாமல், அனைவருமே ஒரு குடும்பமாக இருந்தோம். இது போட்டி என ஒரு நிமிடம்கூட தோணவில்லை. அந்த அளவுக்கு ஜாலியாக இருக்கிறோம்” என்றார்.

‘‘அடுத்து நான்தான் பேசுவேன்’’என செல்லச்சண்டை போட்ட ரக்சிதாவையும், சக்தியையும் பார்த்து பழிப்பு காட்டிய மாளவிகா, “என் அப்பா ராஜேஷ் வைத்யா, மிகப் பெரிய வீணைக்கலைஞர். இதுவரைக்கும் ‘ராஜேஷ் வைத்யா பொண்ணுதானே நீ’ என்று கேட்டவர்கள் எல்லாரும், இப்போது ‘மாளவிகா அப்பா ராஜேஷ் வைத்யா’ என்று சொல்கின்றனர். அதைக் கேட்கும்போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. என்னைவிட, அப்பாதான் ரொம்ப சந்தோஷப்படுகிறார். அந்த வாய்ப்பை அமைத்துக் கொடுத்த ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு நன்றி” என்று நெகிழ்கிறார்.

‘ரொம்ப ஃபீலாகி, அழுதுடாதேம்மா..’ என்று மாளவிகாவைக் கலாய்த்த ரக்சிதா, “நான் ஏற்கெனவே ஜூனியர் சீஸனில் பாடியிருக்கேன். ஆனால், அப்போது இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியவில்லை. அதனால், நிறையகற்றுக்கொண்டு, என் திறமையை பல மடங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறேன். எனது ஃபேவரிட் இசையமைப்பாளர், ஃபேவரிட் மனிதரான ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் நான் 3 பாடல்கள் பாடியதே பெருமையான விஷயம். இறுதிப் போட்டியில் வென்றால் அவரது இசையில் பாடலாம். அதை நினைக்கும்போதே, மெய்சிலிர்க்குது. அந்த வாய்ப்புக்காக காத்திருக்கேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்த சக்தி, “ஏற்கெனவே ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டாப் 10 வரைக்கும் வந்தேன். போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும்கூட, பார்வையாளராக அதன்பிறகு நடந்த அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் கலந்துகொண்டேன். தற்போது இறுதிப் போட்டியில் பங்கேற்கும்போதுதான், அந்தக் கொண்டாட்டத்தை உணர முடிகிறது” என்றார்.

“மண்ணின் இசைக்கு மக்கள் மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியே முக்கிய காரணம். ‘இந்தக் கலை எங்களுடனே அழிந்துவிடுமோ’ என்று பயந்து கொண்டிருந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, மிகப்பெரிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். இந்த இறுதிப் போட்டியின் மேடை, எங்களுக்கு இன்னும் உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன்” என்கிறார் மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ்.

‘‘அதெல்லாம் சரி, உங்களது கடுமையான போட்டியாளராக யாரை நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘‘ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. நாங்கள் எல்லாரும் சமநிலையில் இருப்பதால், யாரையுமே போட்டியாகக் கருத முடியாது” என்கிறார்கள் ஒருமித்த குரலில்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்