அஜித்தின் ‘குட் பேட் அக்லி’-யில் சிம்ரனின் பழைய பாடல்!

By ஸ்டார்க்கர்

‘குட் பேட் அக்லி’ படத்தில் பழைய பாடல் ஒன்றை மீண்டும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. அஜித் நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு பல்வேறு திரையரங்குகள் ஃபுல்லாகிவிட்டது. இப்படத்தில் இருந்து பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.

இதில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ளார். இந்த இருவருக்கும் சிறு பாடலொன்று இருக்கிறது. இதற்காக புதிய பாலொன்றை உருவாக்காமல், பிரபலமான ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு நடனமாட வைத்து படமாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலில் சிம்ரனின் நடனம் மிகவும் பிரபலம் என்பதால், அதற்கு ஏற்றார் போன்று நடன அசைவுகள் உருவாக்கி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், சிம்ரன், த்ரிஷா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்