‘ஜன நாயகன்’ ஓடிடி உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

By ஸ்டார்க்கர்

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு விலை போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையினைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

இதில் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் முன்னணியில் இருந்தாலும், இறுதியாக அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கிறது. இதற்காக 120 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அனைத்து மொழி உரிமையும் இதில் அடங்கும்.

2026-ம் ஆண்டின் முதல் பெரிய படமாக இது அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு அமைத்திருக்கிறது. மேலும், இந்தி வெளியீட்டை கணக்கில் கொண்டு 8 வாரத்துக்கு பின்பே ஓடிடி வெளியீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலும் ‘ஜன நாயகன்’ வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்