‘டிராகன்’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்!

By ஸ்டார்க்கர்

‘டிராகன்’ பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பாராட்டியிருக்கிறார் விஜய்.

பிப்ரவரி 21-ம் தேதி வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதன் வெற்றிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்கள். தற்போது விஜய்யும் ‘டிராகன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

விஜய்யை சந்தித்தது குறித்து ‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ”என்னுடன் இருப்பவர்களுக்கு தெரியும், நான் விஜய் சாரை ஒரு நாள் முழுதகுதியுடன் சந்திக்கவும், அவருடன் இணைந்து பணியாற்றவும் கடுமையாக உழைத்து வருகிறேன் என்று! அவருடன் இணைந்து பணிபுரிவேனா என தெரியாது. ஆனால், விஜய் சாரை சந்தித்தேன். அவருக்கு நேர் எதிரில் அமர்ந்தேன். வழக்கமாக அதிகமாக பேசுவேன். விஜய் சாருடைய தீவிர ரசிகன் என்பதால், எனது குழுவினர் நான் பேசுவதற்காக காத்திருந்தனர்.

அவரோ என்னை உற்றுப் பார்த்தார், என் கண்ணீர் மட்டும் வழிந்தது. என் குழுவினர் ஆச்சரியப்பட்டார்கள். ஏன் இவர் மீது மட்டும் இவ்வளவு அன்பு என்று. அதெல்லாம் உங்களுக்கு சொன்னால் புரியாது. என் நண்பன் பிரதீப் ரங்கநாதனுக்கு படம் பண்ண வந்தேன். “சிறப்பான எழுத்துகள் ப்ரோ” என்று நான் ஆராதிப்பவர் சொல்வதைக் கேட்டு வாழ்க்கை என்ற வட்டம் முடிந்ததாக உணர்கிறேன். இது போதும் நன்றி ஜெகதீஷ் ப்ரோ, அர்ச்சனா மேடம். மிகப்பெரிய பரிசு இது” என்று தெரிவித்துள்ளார்.

‘டிராகன்’ நாயகன் பிரதீப் ரங்கநாதன் விஜய்யை சந்தித்தது குறித்து, “‘கலக்குறீங்க ப்ரோ’ என்று விஜய் சார் சொல்ல இந்த வார்த்தையைக் கேட்டால் எனக்கு எப்படி இருக்கும். நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று தெரியும். வார்த்தைகளுக்கும் நேரத்திற்கும் நன்றி சார். சச்சின் மறுவெளியீட்டிற்கு காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

3 days ago

மேலும்