யுவன் சங்கர் ராஜா, தனது ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘ஸ்வீட் ஹார்ட்’. ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் ரியோ ராஜ் பேசும்போது, “யுவன் சங்கர் ராஜாவின் ரசிகன் நான். இந்தப் படத்தில் எனக்காக அவர் இசையமைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி. இது ரொமான்டிக் டிராமா படம். இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை நேசிக்கக் கூடியவர். இது அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago