திரையுலகில் 25 வருடத்தை நிறைவு செய்த ஸ்ரீகாந்த்

By செய்திப்பிரிவு

கே. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடித்துள்ள படம், ’கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’. காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் மார்ச் 14 -ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது பேசும்போது, “திரையுலகில் 25 வருடம் நிறைவு செய்துள்ளேன். சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசி வரை இதில் இருக்க ஆசைப்படுகிறேன், நான் நடித்ததில் எனக்குப் பிடித்த படம் ‘சதுரங்கம்’. அந்தப் படத்தை வெளியிடாமல் எப்படியோ கொன்று விட்டார்கள். ஆனால் 12 வருடம் கழித்து ஒரு படம் (மதகஜராஜா) வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. இதுதான் சினிமா. ஒவ்வொரு பக்கம் இருந்தும் சினிமாவை அழிக்கிறார்கள். எல்லோரும் இணைந்து முதலில் அதைக் காப்பாற்ற வேண்டும். சினிமாதான் என் குடும்பம். அதில் இன்னும் நான் இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே. செல்வமணி, நடிகை சச்சு, இசையமைப்பாளர் சத்யா, ஆர்.கே.சுந்தர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்