‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்ற பெயரில் உருவாகிறது ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2-ம் பாகம்.
2002-ம் ஆண்டு முரளி, வடிவேலு இணைப்பில் வெளியான படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. இதன் காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்று, படமும் வெற்றியடைந்தது. தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு.
இதில் கருணாஸ், கருணாகரன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் பிரபல தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணனும் நடிகராக அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தின் மூலம் விக்னேஷ் - அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள்.
கறுப்பு தங்கம் இயக்கி வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக செல்வா, இசையமைப்பாளராக ஹரிஹரன் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படம் குறித்து இயக்குநர் கறுப்பு தங்கம், “இக்கதையில் பஸ் தான் ஹீரோ. அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம். இதற்காக பஸ்சை விலைக்கு வாங்கி, படத்துக்கு ஏற்றார் போல் தயார்படுத்தி படப்பிடிப்பு நடத்தி வருகிறோம்.
» பாம்பின் விஷம் கீரியைக் கொல்வதில்லையே ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்
» வீண் பெருமை பேசாமல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும்: அன்புமணி சாடல்
கொடைக்கானல், பன்றிமலை போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி, காரைக்குடி மற்றும் சென்னை போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago