கவின் நடிக்கும் ‘கிஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By ஸ்டார்க்கர்

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் நாயகனாக நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதனை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

‘அயோத்தி’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்துக்கு ‘கிஸ்’ என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், இதன் டீஸர் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்கள். ‘கிஸ்’ படத்தினை கோடை விடுமுறை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

’கிஸ்’ படத்தின் ஒளிப்பதிவளராக ஹரீஷ் கண்ணன், இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின், எடிட்டராக ஆர்.சி.பிரனவ் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்