சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. அதில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமாக வீசியெறியும் துண்டுப் பிரசுரங்களில் ‘‘தமிழ் தீ பரவட்டும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இது அவரது 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100-வது படம் இதுவாகும். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்தத் தலைப்பு அறிவிப்பு டீஸரில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா பங்குபெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
» “பேரவை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து ஆகவில்லை, மாறாக...” - மதுரையில் அண்ணாமலை பேச்சு
» “ஞானசேகரன் செல்போன் அழைப்பு விவரம் விரைவில் வெளியிடப்படும்” - அண்ணாமலை தகவல்
தற்போது, இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ‘தமிழ் தீ பரவட்டும்’ என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago