இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘நான் ஆணையிட்டால்’ என்ற டேக் லைன் உடன் தன் கையில் உள்ள சாட்டையை விஜய் சுழற்றுவது போல இந்த செகண்ட் லுக் போஸ்டர் உள்ளது. இது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் நடிகர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்’ பாடலை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படம் அரசியல் கதைக்களத்தை பின்னணியாக கொண்டது என்பது இந்த போஸடரிலும் உறுதி ஆகிறது.
‘லியோ’ மற்றும் ‘கோட்’ படப்பிடிப்புகளுக்கு இடையே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி மிகவும் பிரபலம். அந்தப் புகைப்படப் பாணியில் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு.
கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
» “டங்ஸ்டன் திட்டம் ரத்து... நமக்கு கிடைத்த வெற்றி!” - அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
» டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய 11,608 பேர் மீதான வழக்குகள் வாபஸ்
அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். தீவிர அரசியலில் ஈடுபடும் முன்பு, விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ‘ஜன நாயகன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago