அடுத்த 6 மாதத்தில் ‘இந்தியன் 3’ வெளியாகும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்று படுதோல்வியை தழுவியது. ஆனால், அப்படத்தின் கதை அத்துடன் முடிவடையவில்லை. அதன் 3-ம் பாகத்தின் ட்ரெய்லர் இறுதியில் இணைக்கப்பட்டு இருந்தது.
தற்போது ‘கேம் சேஞ்சர்’ பணிகளை முடித்துவிட்டதால் ‘இந்தியன் 3’ எப்போது என்ற கேள்விக்கு இயக்குநர் ஷங்கர், ”’கேம் சேஞ்சர்’ முடிந்துவிட்டதால் ‘இந்தியன் 3’ தொடங்கிவிட வேண்டியது தான். அப்படத்தின் பணிகள் தொடங்கினால் 6 மாதங்களில் திரைக்கு கொண்டு வந்துவிடலாம். அதில் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே லைகா நிறுவனம் – ஷங்கர் இருவருக்கும் இடையே பிரச்சினை உருவாகியுள்ளது. இப்பிரச்சினைகளை பேசி முடித்தவுடன் தான் ‘இந்தியன் 3’ பணிகள் தொடங்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதற்கு அமெரிக்காவில் இருந்து கமல் இந்தியா திரும்ப வேண்டும். அதற்காக படக்குழுவினர் காத்திருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago