‘இட்லி கடை’ எமோஷனலான படம்: நித்யா மேனன்

By ஸ்டார்க்கர்

‘இட்லி கடை’ ரொம்ப எமோஷனலான படம் என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் நித்யா மேனன். அதில் அளித்த பேட்டியொன்றில், “’காதலிக்க நேரமில்லை’ படத்துக்கு நேர் எதிர்மறையாக ‘இட்லி கடை’ படம் இருக்கும். அப்படத்துக்காக ஆர்வமாக இருக்கிறேன். எதையுமே திட்டமிடாமல் இருக்கும் போது, அது தானாக நடக்கும். அப்படமும் இதே ஆண்டில் வெளியாகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

அப்படியொரு கதாபாத்திரத்தில் என்னை பார்ப்பீர்கள் என்று யாராலும் யூகிக்கவே முடியாது. நித்யா மேனனை இப்படியும் பார்க்கலாமா என்று இருக்கும். ரொம்பவே உணர்ச்சிகரமான, எமோஷனலான படம். அப்படம் பார்த்தவர்கள் அழுதுவிடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார் நித்யா மேனன்.

ஜனவரி 14-ம் தேதி வெளியீடாக வரவுள்ளது ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். தனுஷ் இயக்கி, நடித்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வரும் படம் ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்