2024-ல் வசூல் அள்ளிய தென்னிந்திய திரைப்படங்கள் - ஓர் அலசல்

By செ. ஏக்நாத்ராஜ்

இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்ற நிலை கரோனா​வுக்கு பிறகு மொத்​தமாக மாறி​விட்​டது. அதற்கு முன் தென்னிந்தியா​வில் இருந்து ‘பாகுபலி’ போன்ற படங்கள் தங்கள் இருப்​பைக் காட்​டி​விட்டுப் போனாலும், கடந்த சில வருடங்​களாகத் தென்னிந்திய சினி​மா​வின் தாக்கம் இந்தியா முழு​வதும் பரவி​யிருக்​கிறது. அதன்படி 2024-ம் ஆண்டு பான் இந்தியா முறை​யில் வெளி​யாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த தென்னிந்திய திரைப்​படங்கள் இவை.

பிரேமலு, மகாராஜா: மலையாளத்​தில் உருவான ‘பிரேமலு’, இந்த வருடத்​தின் முதல் சூப்பர் ஹிட்டை தென்னிந்திய சினி​மாவுக்கு வழங்கிய திரைப்​படம். நஸ்லன், மமிதா பைஜு நடித்த இந்தப் படத்தை கிரிஷ் இயக்கி இருந்​தார். இன்றைய மென்​பொருள் யுகத்​துக் காதலை நகைச்​சுவை​யாக​வும் நையாண்​டி​யாக​வும் சொன்ன இந்தப் படம், மற்ற மொழிகளி​லும் வரவேற்​பைப் பெற்​றது. தமிழில் நித்​திலன் சாமிநாதன் இயக்​கத்​தில், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, ஒரு படத்​துக்கு திரைக்​கதை​தான் ராஜா என்ப​தைக் கம்பீரமாக நிரூபித்த படம். தெரிந்த கதைதான் என்றாலும் ‘நான் லீனியர்’ ட்ரீட்​மென்ட்​டில் ரசிகர்​களின் மனதைக் கொள்ளை கொண்​டது. தமிழில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய ‘மகாராஜா’ மற்ற மொழி பார்​வை​யாளர்​களை​யும் ஈர்த்​தது.

மஞ்சும்மள் பாய்ஸ், தி கோட்: சர்வைவல் த்ரில்லர் படமாக உருவான மலையாள ‘மஞ்​சும்மள் பாய்ஸ்’, சந்தேகமே இல்லாமல் இந்த வருடத்​தின் பிளாக்​பஸ்டர் படங்​களில் ஒன்று. குணா குகை​யும் அதில் இடம்​பெற்ற பாடலும் இந்தப் படத்​துக்​குத் தமிழிலும் வசூலைக் கொட்​டிக் கொடுத்தது. தெலுங்​கிலும் அப்படியே. ரூ.20 கோடி​யில் உருவான இந்தப் படத்​தின் மொத்த வசூல், ரூ.250 கோடியை தாண்​டிய​தாகச் சொல்​கிறார்​கள்.

பொருளா​தாரக் குற்​றப்​பின்னணி​யில் தெலுங்​கில் உருவாகி வெளியான ‘லக்கி பாஸ்​கர்’, தென்னிந்திய சினி​மாவுக்கு அடுத்த ஜாக்​பாட்டை தந்த திரைப்​படம். 1992-ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்​தின் பின்னணி​யில் உருவான இதில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்​திருந்​தனர். வெங்கி அட்லுரி இயக்கி​யிருந்​தார். வெங்கட் பிரபு இயக்​கத்​தில் விஜய் நடித்த ‘தி கோட்’, ரூ.465 கோடியை வசூலித்​த​தாகச் சொல்​கிறார்​கள். இதில் மூன்று தோற்​றத்​தில் வரும் விஜய், நெகட்​டிவ் கேரக்​டரிலும் நடித்​திருந்​தார்.

ஆடுஜீ​விதம், அமரன்: பிளஸ்சி இயக்​கத்​தில் பிருத்​விராஜ் நடித்த சர்வைவல் த்ரில்லர் படமான ‘ஆடுஜீ​விதம்’ பார்​வை​யாளர்​களுக்கு புதிய அனுபவத்​தைக் கொடுத்​தது. ரூ.150 கோடிக்​கும் மேல் வசூலித்த இந்தப் படத்​துக்கு ஏ.ஆர்​.ரஹ்​மான் இசை அமைத்திருந்தார். நாக் அஸ்வின் இயக்​கத்​தில் பிரபாஸ், அமிதாப்​பச்​சன், கமல்​ஹாசன், தீபிகா படுகோன் நடிப்​பில் மெகா பட்ஜெட்​டில் உருவான ‘ஃபியூச்​சரிஸ்​டிக்’ படமான ‘கல்கி 2898 ஏடி’, டெக்​னிக்​கலாக மிரட்​டியது. இது, இந்தியா முழு​வதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்கிறார்​கள்.

சிவகார்த்தி​கேயன், சாய் பல்லவி நடித்த ‘அமரன்’, தமிழில் இந்த வருடம் அதிகம் பேசப்​பட்ட படம். வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை​யில் இருந்து எடுக்​கப்​பட்ட இந்தக் கதையை ராஜ்கு​மார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்தப் படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்​படுத்தி இருக்​கிறது.

புஷ்பா 2, ‘தேவாரா 1: சுகு​மார் இயக்​கத்​தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்​பில் வெளியான ‘புஷ்பா 2’ இந்த வருடம் இந்திய சினி​மா​வின் அதிகப்​பட்ச வசூலை அள்ளி இருக் கிறது. உலகம் முழு​வதும் 1700 கோடி ரூபாயைத் தாண்டி செல்​லும் அதன் வசூல் வேகம் இன்னும் நிற்​காமல் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரி​யம்!

பான் இந்தியா முறை​யில் வெளியான ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடித்த ‘தேவாரா 1’ ரூ. 400 கோடி​யும் தெலுங்​கில் உருவான சூப்பர் ஹீரோ படமான ‘ஹனு-​மான்’ ரூ.300 கோடிக்கு மேலும் வசூல் ஈட்​டி​யுள்ள​தாகக் கூறப்​படு​கிறது. ரஜினி​யின் வேட்​டையன் ரூ.240 கோடி​யும், கமலின் இந்​தி​யன் 2, தனுஷின் ராயன், சுந்​தர். சி-​யின் அரண்மனை 4, மகேஷ்பாபு​வின் குண்​டூர்​காரம், ஃபஹத் ஃபாசில் நடித்த ஆவேஷம் ஆகிய படங்​கள் ரூ.100 கோடிக்​கும்​ அ​திக​மாக வசூலித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

மேலும்