‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக்தான் அஜித்தின் ‘விடாமுயற்சி’ என்பதை படக்குழு மீண்டும் உறுதி செய்திருக்கிறது.
‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’ என்று தொடக்கத்தில் இருந்தே இணையத்தில் தகவல் வெளியாகி வந்தது. ஆனால், படக்குழு சார்பில் தற்போது வரை இதனை உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே, ‘விடாமுயற்சி’ படத்தின் கதைக்களம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, ‘ஒரு திருமணமான தம்பதியின் பயணம், மனைவி காணாமல் போவதைத் தொடர்ந்து, ஒரு பரபரப்பான திசையில் திரும்புகிறது. கணவன் ஒரு இடைவிடாத தேடலை மேற்கொள்ளும் வேளையில், அடையாளம் தெரியாத ஒரு வில்லன் இடையூறுகளை உருவாக்குகிறார்’ என்பதே ‘விடாமுயற்சி’ படத்தின் கதைக்களம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அப்படியே ‘பிரேக்டவுன்’ படத்தின் கதையாகும். இதன் மூலம் ‘பிரேக்டவுன்’ ரீமேக்தான் ‘விடாமுயற்சி’ என்பது உறுதியாகிவிட்டது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago