அலங்கு, தி ஸ்மைல் மேன், திரு.மாணிக்கம், ராஜாகிளி, மழையில் நனைகிறேன், பேபி ஜான், பரோஸ் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வரிசை கட்டுகின்றன.
அலங்கு: ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் இயக்கிய படம் ‘அலங்கு’. இதில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ் மற்றும் அன்புமணியின் மகள் எஸ்.ஏ.சங்கமித்ரா தயாரித்துள்ளனர்.
மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இப்படம், வெள்ளிக்கிழமை (டிச.27) திரையரங்குகளில் வெளியாகிறது.
தி ஸ்மைல் மேன்: ஷாம் பிரவீன் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள படம் ‘தி ஸ்மைல் மேன்’. ஸ்ரீ குமார், சிஜாரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரி சரத்குமாருக்கு ஒரு வருடத்தில் அனைத்து ஞாபகங்களும் அழிந்துவிடும் என மருத்துவர் எச்சரிக்கிறார். தன்னுடைய உடல்நல பாதிப்புகளுக்கு இடையில் அவர் கையில் வழக்கு ஒன்று வந்து சேருகிறது. சீரியல் கில்லர் வழக்கை அவர் விசாரிப்பதே திரைக்கதை என தெரிகிறது. இப்படம் வெள்ளிக்கிழமை (டிச.27) திரையரங்குகளில் வெளியாகிறது.
» சபரிமலையில் நாளை மண்டல பூஜை நிறைவு: சந்நிதானத்தில் பணிபுரிந்தவர்களுக்கு விருந்து
» டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார்
திரு மாணிக்கம்: நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘திரு மாணிக்கம்’. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இப்படம் வெள்ளிக்கிழமை (டிச.27) திரையரங்குகளில் வெளியாகிறது.
ராஜாகிளி: நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ராஜாகிளி’. அவரது மகன் உமாபதி ராமையா திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார். சமுத்திரக்கனி, ஸ்வேதா, சுபா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வெள்ளிக்கிழமை (டிச.27) தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.
மழையில் நனைகிறேன்: அன்சன் பால், ரெபா மோனிகா ஜான், ராஜா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மழையில் நனைகிறேன்’. டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார். மழை முக்கியப் பங்கு வகிக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் வெள்ளிக்கிழமை (டிச.27) தியேட்டரில் ரிலீஸாகிறது.
பேபி ஜான்: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஹிட்டான படம், ‘தெறி’. இதில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ‘பேபி ஜான்’ (Baby John) என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா, சான்யா மல்ஹோத்ரா என பலர் நடித்துள்ளனர். ஜீவா நடித்த ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்கியுள்ள இந்தப் படம் கிறிஸ்துமஸ் தினமான இன்று (டிச.25) திரையரங்குகளில் வெளியானது.
பரோஸ்: நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகியுள்ள படம் ‘பரோஸ்’ (Barroz). 3டி-யில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட ஃபேன்டஸி படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், பின்னணி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் கிறிஸ்துமஸ் தினமான இன்று (டிச.25) திரையரங்குகளில் வெளியானது.
இவற்றுடன், குற்றமும் மர்மமும் அடிப்படையிலான தெலுங்கு படம் ‘ஸ்ரீகாகுலம் ஷெர்லாக்ஹோம்ஸ்’ (Srikakulam Sherlockholmes) புதன்கிழமை (டிச.25) வெளியானது. சுதீப் நடித்துள்ள கன்னட படமான ‘மேக்ஸ்’ (Max) வெள்ளிக்கிழமை (டிச.27) தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago