‘நம்பிக்கை தந்தது விடுதலை 2’ - நடிகர் ஜெயவந்த் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

வெற்றி​மாறன் இயக்​கத்​தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உட்பட பலர் நடித்த படம், ‘விடுதலை 2’. இதில் பண்ணை​யார் கதாபாத்​திரத்​தில் ஜெயவந்த் நடித்​திருந்​தார். இவர், ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய காளி’ ஆகிய படங்​களில் ஹீரோவாக நடித்​தவர். இந்தப் படத்​தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறிய​தாவது:

வெற்றி​மாறன் படத்​தில் நடிக்க வேண்​டும் என்ற ஆசை இருந்​தது. சின்ன கதாபாத்​திரத்​திலாவது நடிக்க வேண்​டும் என்று நினைத்​தேன். அதற்காக இருவருக்​கும் பொதுவான நண்பர் மூலம் முயற்சி செய்​து​கொண்​டிருந் தேன். அப்படித்​தான் இந்தப் பட வாய்ப்​புக் கிடைத்​தது. நெகட்​டிவ் கேரக்டர் என்றாலும் கதையில் எனக்​கும் முக்​கி​யத்துவம் இருந்​த​தில் மகிழ்ச்சி. வில்​லனாக நடிக்​கும்​போது ஒரு எல்லைக்​குள் நின்று நடிக்​காமல் வெவ்​வேறு விதமாக நம்மை வெளிப்​படுத்த முடி​யும். இந்தப் படத்துக்காக சோளக்​காட்​டில் நடக்​கும் ஆக்‌ஷன் காட்​சி​யில் நடிக்கச் சிரமப்​பட்​டேன். அதை 18 நாட்கள் படமாக்​கினார்​கள்.

வெற்றி​மாறன், விஜய் சேதுபதி ஆகியோரிடம் நடிப்​பின் நுணுக்​கங்​களைக் கற்றுக்​கொண்​டேன். இதில் என் நடிப்​பைப் பலர் பாராட்டு​கிறார்​கள். என் நடிப்​பின் மீது இப்போது நம்பிக்கை வந்திருக்​கிறது. இனி, ஹீரோ என்றில்​லாமல் சிறந்த கதாபாத்​திரங்​களில் நடிக்க முடிவு செய்​துள்ளேன். இவ்வாறு ஜெயவந்த் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்