சென்னை: கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிளாக்’. இப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ஜீவாவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்கிறார். உலக அளவில் பிரபலமான ‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ கதைக்கருவுடன் உருவாகும் இந்த படத்துக்கு ‘அகத்தியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ஹாரர் த்ரில்லர் படமான இதனை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கான டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜனவரி 31 திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறும்போது, "அகத்தியா படம் மூலம் ஹாரத்- த்ரில்லர் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago