’விடுதலை 2’ படம் ஓடிடியில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாக இப்போது தான் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. “படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் 8 நிமிட காட்சிகளை குறைத்துள்ளோம். கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம்” என்று பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
தற்போது படம் வெளியாகிவிட்டதால் வெற்றிமாறன் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘விடுதலை’ படத்துக்காக படமாக்கப்பட்ட காட்சிகளின் நீளம் குறித்து பேசியிருக்கிறார். அதில் “’விடுதலை 2’ படம் இயக்குநரின் கட் வடிவில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும் என நினைக்கிறேன். எனவே, படம் ஓடிடியில் கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும். முதல் பாகத்தில் 11 நிமிடங்கள் கூடுதலாக இருந்தது என நினைக்கிறேன். எவ்வளவு படமாக்க முடியுமோ, அவ்வளவு வைத்துள்ளோம்.
இப்போது முதல் பாகம், திரைப்பட விழா வடிவம் (4 மணி நேரம்), இரண்டாம் பாகத்தின் முதல் பாதி 1:45 மணி நேரம், இரண்டாம் பாதி 1:55 மணி நேரம் என எல்லாத்தையும் சேர்த்தால் 8 மணி நேர படம் இருக்கிறது. அதனை வைத்து 4 பார்ட் பண்ணலாம்” என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago