சென்னை: சென்னையில் நடைபெற்ற 22-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப் படங்களாக தேர்வான ‘அமரன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது விஜய்சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கும் வழங்கப்பட்டது.
இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதில் 60 நாடுகளில் இருந்து 180 படங்கள் திரையிடப்பட்டன. திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில், திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் டி.சிவா, திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கினர்.
» மழையால் நீர்நிலைகள் நிரம்பட்டும்..! | மார்கழி மகா உற்சவம் 4
» சென்னை | பெட்ரோல் பங்க் உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ஐ.டி. ஊழியர் தம்பதியிடம் ரூ.50 லட்சம் மோசடி
சிறந்த திரைப்படங்கள் பிரிவில் முதல் பரிசை ‘அமரன்’, இரண்டாவது பரிசை ‘லப்பர் பந்து’ படங்கள் பெற்றன. சிறந்த நடிகர் விஜய் சேதுபதி (மகாராஜா), சிறந்த நடிகை சாய்பல்லவி (அமரன்), சிறந்த ஒளிப்பதிவு சி.எச்.சாய்(அமரன்), சிறந்த படத் தொகுப்பு பிலோமின் ராஜ் (மகாராஜா), சிறந்த குழந்தை நட்சத்திரம் பொன்வேல் (வாழை), சிறந்த பொழுதுப்போக்கு படம் வேட்டையன், அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது நடிகர் அருள்நிதி, சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (அமரன்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அதேபோல, சிறப்பு நடுவர் விருது ‘ஜமா’ படத்துக்கு வழங்கப்பட்டது. குறும்படங்களுக்கான பிரிவில் சிறந்த திரைப்படமாக கயமை தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், இந்திய திரைப்பட திறனாய்வு கழகத் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கஸ்வாமி, பொதுச் செயலாளர் ஏவிஎம்.கே.சண்முகம், இணைச் செயலாளர் சுரேஷ் மேனன், நடிகர் அரவிந்த்சாமி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகைகள் துஷாரா விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago