கிறிஸ்தவ முறைப்படியும் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணம்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் சில தினங்களுக்கு முன்பு இந்து முறைப்படி நடைபெற்ற நிலையில், இன்று கிறிஸ்தவ முறைப்படியும் கோவாவில் நடைபெற்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி நண்பர் ஆன்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாக அறிவித்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, ஆன்டனி தட்டில் - கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் அண்மையில் நடந்​தது. இதில் நெருங்கிய உறவினர்​கள், நண்பர்கள் கலந்து கொண்​டனர். இந்த திருமணத்துக்காக கோவா சென்றிருந்த தவெக தலைவரான நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சில தினங்களுக்கு முன்பு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று கிறிஸ்தவ முறைப்படியும் கீர்த்தி சுரேஷ் - ஆன்டனி தட்டில் திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை மேனகா - மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரது மகள் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய அவர், ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ரஜினிமுரு​கன், பைரவா, சர்க்கார், ரெமோ, அண்ணாத்த, ரகு தாத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்துக்காக தேசிய விருது பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்