‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் காட்சிகள் நிறைவடைந்ததால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் அஜித். அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “எனக்கு வாழ்நாள் வாய்ப்பைக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. எனது கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ அஜித் சார். இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுடன் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அஜித் மிகவும் ஒல்லியாக இருப்பதால், அப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத்தும், பின்னணி இசைக்கு ஜி.வி.பிரகாஷும் பணிபுரிந்து வருகிறார்கள்.
‘குட் பேட் அக்லி’ பணிகள் முடிவடைந்துவிட்டதால், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள உள்ளார் அஜித்.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago