சென்னை: ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படம் எல்சியு-வில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் மாதவன் நடிக்கிறார் என செய்திகள் பரவியதற்கு அவரே பதிலளித்துள்ளார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ள படம் ‘பென்ஸ்’. இப்படம் எல்.சி.யு-வில் இணையவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை பலரும் பகிர்ந்து மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் தற்போது அச்செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மாதவன், “எனக்கும் இது புதிய செய்தி தான். இதை கேட்கும்போது ஏற்படும் உற்சாகத்தை போல, இது போன்ற ஒரு யுனிவர்ஸில் நானும் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறேன்.
இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதால், இந்த செய்தி எனக்கு ஆச்சரியமளிக்கிறது” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ‘பென்ஸ்’ படத்தில் மாதவன் நடிக்கவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. லாரன்ஸ் உடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago