கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
’தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, சண்டைக் காட்சிகளின் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் கமல், இதனை அவரது ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதில் கமலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு ஜனவரி மாதம் முதல் தொடங்கவுள்ளது.
இப்படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. தனது தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரிய கமல் முடிவு செய்திருக்கிறார்.
கமல் - அன்பறிவ் இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தான் தொடங்க இருக்கிறது. அமெரிக்காவில் ஓய்வில் இருக்கும் கமல் ஜனவரி மாதத்தில் தான் சென்னை திரும்புகிறார். அதற்கு பின் தான் அன்பறிவ் படத்தின் பணிகள் சூடுபிடிக்கும் என்கிறார்கள் திரையுலகில்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago