சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறினார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியானதிலிருந்து இணையத்தில் பல்வேறு கிண்டல்களுக்கு ஆளானார் விக்னேஷ் சிவன். தனுஷ் தொடர்ந்த வழக்கிற்கு தனது எதிர்வினை சர்ச்சையானதைத் தொடர்ந்து, அப்பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். அதற்குப் பிறகு ‘நானும் ரவுடிதான்’ படத்தினை முன்வைத்து பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இதைத் தாண்டி தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்த முன்னணி இயக்குநர்களின் பேட்டியில் கலந்து கொண்டார். இதன் மூலமும் கடுமையான கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
அவர்கள் அனைவருமே சமீபத்தில் படம் இயக்கி வெற்றி கண்டவர்கள். ஆனால், அதில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் ஏதுவாக அமைந்தது. ஆகையால் தொடர்ச்சியாக மீம்ஸ் கிண்டலுக்கு ஆளானார் விக்னேஷ் சிவன். இந்த இரண்டு சர்ச்சைகளையும் முன்வைத்து தனது எக்ஸ் தளத்தின் கணக்கை முடக்கிவிட்டார் விக்னேஷ் சிவன்.
ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். எக்ஸ் தளத்துக்கு திரும்ப வருவாரா அல்லது இனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டுமே பயன்படுத்துவாரா என்பது விரைவில் தெரியவரும். அவரது மனைவி நயன்தாரா எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களை உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago