‘குட் பேட் அக்லி’ படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘குட் பேட் அக்லி’ படத்தின் இசையமைக்கும் பொறுப்பில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பலரும் அவருக்கு பதிலாக அனிருத் தான் இசையமைப்பாளராக இருப்பார் என்று தெரிவித்தார்கள். ஆனால், ‘குட் பேட் அக்லி’ படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பொறுப்பேற்று இருக்கிறார்.
‘குட் பேட் அக்லி’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - ஜி.வி.பிரகாஷ் இருவருமே நெருங்கிய நண்பர்கள். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் ஆதிக் ரவிச்சந்திரனை இயக்குநராக்கியவர் ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நட்பு ‘குட் பேட் அக்லி’ படத்திலும் தொடர்கிறது.
‘குட் பேட் அக்லி’ படத்தில் பாடல்களையும் படமாக்கி முடித்துவிட்டார்கள். இதனால் பாடல்களுக்கு மட்டும் தேவி ஸ்ரீபிரசாத்தை உபயோகித்துவிட்டு, பின்னணி இசையமைக்கும் பொறுப்பை மட்டும் ஜி.வி.பிரகாஷ் ஏற்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை வதந்திகள் பரவிக் கொண்டே இருப்பது உறுதி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago